பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

இலக்கியக் காட்சிகள்

பிறவோ ரவைக்களம் பிழைத்துப் பெயர்மின்; பிறர்மனை அஞ்சுமின்; பிழையுயிர் ஒம்புமின்; அறமனை காமின் ;அல்லவை கடிமின் கள்ளுங் களவும் காமமும் பொய்யும் வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின், இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா உளங்ாள் வரையாது"ஒல்லுவ தொழியாது செல்லுங் தேஎத்துக் குறுதுணை தேடுமின் மல்லன்மா ஞாலத்து வாழ்வி ரீங்கென்

(சிலம்பு , வரந்தருகாதை : 185-202)

என்று வாழ்க்கை நெறிகளை உணர்த்துகின்றார்.

அம்மென் இனர அடும்புகாள் அன்னங்காள் நம்மை மறந்தாரை காம்மறக்க மாட்டேமால்

(கானல் வரி 32 : 3-4)

என்ற இரண்டு அடிகளில் எத்துணை அருமையான நீதியை

நம்முன் வைக்கின்றார்.

அடுத்துத் தோன்றிய மணிமேகலை உணர்த்தும்

அறங்கள் பல.

முடிபொருள் உணர்ந்தோர் முதுநீர் உலகில் கடியப் பட்டன வைந்துள அவற்றில் கள்ளும் பொய்யும் களவும் கொலையும் தள்ளா தாகும் காமங் தம்பால் ஆங்கது கடிங்தோர் அல்லவை கடிங்தோரென நீங்கின ரன்றே நிறைதவ மாக்கள் நீங்கா ரன்றே நீணில வேந்தே தாங்கா நரகங் தன்னிடை யுழப்போர்

(மணிமேகலை 22 : 169-176)