பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

இலக்கியக் காட்சிகள்


கோல்ட்ஸ்மித் கூறும் கூற்றினை நாம் கம்பர்மேல் ஏற்றிச் சொன்னால் மிகையாகாது.

வண்மை இல்லை ஒர் வறுமை இன்மையால் திண்மை இல்லைநேர் செறுநர் இன்மையால் உண்மை இல்லை பொய் உரைஇ லாமையால் ஒண்மை இல்லைபல் கேள்வி ஓங்கலால்

(கம்பராமாயணம்)

என்ற பாடலில் வறுமையும், பகையும், பொய்ம்மையும், ஒண்மையும் இல்லாத ஒரு நாட்டைக் கற்பனையில் படைத்துக் காட்டுவதன் மூலம், ஒரு நாடு இப்படித்தான் இருத்தல் வேண்டும் என்பதனை அன்றோ உணர்த்தி நிற்கின்றான் கம்பன் .

இழிப்புறு நெஞ்சினள் ஆயினும் பழிப்புறம் போகாப் பண்பினள்

(கம்பராமாயணம்) என்று கதைமாந்தரை வருணிப்பதிலும் ஓர் அறத்தை உணர்த்திச் செல்கின்றான் கம்பன்.

இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர் நிரலில் முதலில் நிற்பவர் பாரதி. அவர் ஒர் உலகக் கவி! புரட்சிக்கவி.

சிந்து நதியின்மிசை நிலவினிலே

சேரகன் னாட்டிளம் பெண்களுடனே

சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்துத்

தோணிக ளோட்டி விளையாடி வருவோம்

(பாரத தேசம் : 5)

என்பது நாட்டு ஒருமைப்பாட்டிற்கு அவர் தீட்டிய சித்திரம் அன்றோ!