பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

இலக்கியக் காட்சிகள்


நிலையினைப் புலவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார் கம்பத்தினை அசைக்கும் யானையின் செயலுக்கு ஒப்பிட் டுள்ளார். --

வெளிலிளக்குங் களிறுபோலத் தீம்புகார்த் திரைமுன்றுறைத் துங்குநாவாய் துவன்றிருக்கை முசைச்கூம்பி னசைக் கொடியும்.’

பெரும்பாணாற்றுப்படை ஆசிரியர் மேற்குத் திசையி லிருந்து பால் போன்ற வெண்ணிறமான குதிரைகளையும், வடதிசையிலிருந்து மற்றும் சிறந்த பொருள்களையும் நாவாய்கள் கொணர்ந்து தரும் என்று குறிப்பிட்டுள்ளார்.

நீர்ப்பெயற் றெல்லைப் போகிப் பாற்கேழ் வாலுளைப் புரவியோடு வடவளங் தரூஉம் நாவாய் சூழ்ந்த நளிநீர்ப் படப்பை.-3

மதுரைக் காஞ்சியில் நாவாய்களைப் பற்றிய செய்தி சற்று விரிவாகவே காணப் படுகின்றது. நாவாய்கள் பாய் விரித்துத் திரண்டு உருண்டோடிக் கரை நோக்கி வரும் அலைகளைக் கிழித்துச் செல்லும்; பொன்னைக் கொண்டு வந்து தந்து மக்களின் செல்வநிலையை அவைசிறப்பிப்பன: முரசம் ஒலிக்க அவை துறைமுகத்தை அடைவன.

கொடும்புணரி விலங்கு போழக் கடுங்காலொடு கரைசேர நெடுங்கொடிமிசை யிதையெடுத்து இன்னிசைய முரசமுழங்கப்

12. பட்டினப்பாலை . 172-175, 13. பெரும்பாணாற்றுப்படை : 319-321.