பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

இலக்கியக் காட்சிகள்


அருங்கலங் தரீஇயர் நீர்மிசை நிவக்கும் பெருங்கலி வங்கங் திசைதிரிங் தாங்கு.’

அகநானுாற்றுப் பாடலொன்று உலகு புடை பெயர்ந் தாலொத்த அச்சம் தோன்றப் புலால் வீசும் அலைகளை யுடைய பெரிய கடலைப் பிளந்து செல்லும் வங்கத்தைக் குறிப்பிடுகின்றது.

உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம் புலவுத் திரைப் பெருங்கடல் நீரிடைப் போழ.”

கரிய கழி வழியாக வந்திறங்கும் கடலிற் செல்லும் கவினுறு வங்கம் பற்றிப் புறநானூறும் பேசுகின்றது:

இருங்கழி யிழிதரு மார்கலி வங்கம்.’

கலங்கரை விளக்கம்

நடுக்கடலில் இரவு நேரத்தில் வழங்கும் கலங்கள் திசைதடுமாறாது கரை வந்தடைதற்குத் துணையாகக் கடற்கரைப் பட்டினங்களில் அக்காலத்தில் கலங்கரை விளக்கங்கள் அமைந்திருந்தன. இத்தகு கலங்கரை விளக் கங்களைப் பற்றிப் பெரும்பாணாற்றுப்படை பின்வருமாறு

குறிப்பிடுகின்றது:

வானம் ஊன்றிய மதலை போல ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி விண்பொர நிவந்த வேயா மாடத்து இரவின் மாட்டிய இலங்குசுடர் ஞெகிழி உரவுநீர் அழுவத்து ஒடுகலம் கரையும் துறைபிறக் கொழியப் போகி.”

17. பதிற்றுப்பத்து : 52 : 3-4 18. அகநானுாறு : 255 :1-2 19. புறநானுாறு : 400 : 20 20. பெரும்பாணாற்றுப்படை 346-351