பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெறியாட்டு - .39

கடவுள் வழிபாட்டு நிலையும் இருந்தனவாக அறிகிறோம். பின்னாளில் தென்னாடு போந்த ஆரியர் வருகைக்கு முன்பே தமிழர்தம் சமயவாழ்க்கை ஒரு தனிமையான பண் போடு திகழ்ந்ததாகக் கூறுவர்.”

தொடக்கக் காலத்தில் ஒருவித அச்சத்தோடு கடவுள் வழிபாடு தொடங்கியிருக்கச் கூடும். மன்ற மராஅத்து பேஎமுதிர் கடவுள் கொடியோர்த் தெறுTஉம் என்ப” என்ற கபிலர் பாடல் இக் கருத்தினை வலியுறுத்தும். வரலாற்றுக்கு எட்டாத பழங்காலத்தில் தெய்வத்தை வழுத்தி வழிபடும் முறைகள் இயற்கையோடு வாழ்வு இயைந்த முறையில் அமைந்திருந்தன.

மலையும் மலையைச் சார்ந்ததுமான கு றி ஞ் சி நிலத்திலே வாழ்ந்த மக்கள், ‘வெறியாட்டு முதலிய விழாக் களினால் தெய்வங்களை வழுத்தி மகிழ்விக்கும் அளவி லேயே தமிழர் சமயம் அமைத்திருந்தல் கூடும்’ என்றும், காலஞ்செல்லச் செல்லத் தமிழருக்கே சிறப்பான வெறி யாட்டு முதலிய வழிபாட்டு முறைகளும், ஆரியருக்குரிய கிரியை முதலியவற்றால் மறைக்கப்பட்டு ஒழிந்தன.’ என்றும் பேராசிரியர் டாக்டர் சு. வித்தியானந்தம் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.”

சங்க காலத்தே குறிஞ்சி நில மக்களிடத்தே வெறியாட்டு என்னும் வெறிக் கூத்து மிகப் பெரிதும் பரவியிருந்தது ‘வெறி’ என்னும் சொல் தெய்வத்தைக் குறிப்பதாகும்.” தெய்வம் மக்கள்மீது வந்து ஆடுவதை

3. டாக்டர் சு. வித்தியானந்தம்; தமிழர் சால்பு

L. 106.

4. குறுந்தொகை : 87 : 1-2. 5. தமிழர் சால்பு : ப. 106, 107. 6. தமிழ்க் ககைகளஞ்சியம்: தொகுதி 6: பக்கம் 505.