பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

இலக்கியக் காட்சிகள்


யில் அப்பிக் கொண்டு, வழிபடும் மந்திரத்தை உச்சரித் படி, சிவந்த நூலைக் கையிலே காப்பாகக் கட்டிக்கொண்டு வெண்பொரியைத் தூவி, ஆட்டின் குருதியுடன் பிசைந்த துாய வெள்ளிய அரிசியைச் சிறுபலியாக இட்டு, மஞ்சள் நீருடன் நறுமணஞ் சான்ற சந்தனம் முதலியவற்றைத் தெளித்து, செவ்வலரி முதலிய பூக்களை மாலையாகச் தொங்கவிட்டு, ஊரெங்கும் பசியும் பிணியும் நீங்குக வென்று வாழ்த்தி, நறிய புகை யூட்டி, குறிஞ்சித் திம் பண்ணைப் பாடி, இன்னிசைக் கருவிகள் பலவும் அருவி யென ஒலிக்க, பலவகைச் செந்நிறப் பூக்களைத் துாவிச் செந்தினை பரப்பி, வெறியயர் களத்தைப் புனைந்து, ஆர வாரம் எழும்பப் பாடி மணியசைத்து வழிபடுவர்’ என்ற செய்தி, குறமகள் வெறியயர்ந்தாள் என்ற நிலையில் திருமுருகாற்றுப்படையாற் பெறப்படுகின்றது.

அகநானூற்றில் ஆடுகளம்

“மலைநாட்டுத் தலைவன் மா ர் பு செய்த காதல் நோயினைத் தாய் அறியாதவளாகித் தலைவியின் வளை நெகிழ்ந்த தன்மையைப் பார்த்துச் செயலற்ற உள்ளத் தின ளாய்க் கட்டுவிச்சியை வினவ, அவள் பிரப்பரிசியைப் பரப்பி வைத்து, இது முருகனது செயலான் வந்த அரிய வருத்தம் என்ற கூற, அதனை வாய்மையாகக் கருதி, ஒவி யத்தை யொத்த அழகு புனையப்பெற்ற நல்ல மனையில், தன் மகளின், பலராலும் போற்றப்பட்ட பண்டைய -91էՔ(3, முன்போற் சிறப்புற வேண்டுமென்று தெய்வத்தைப் பரவ நினைந்தாள். இணைந்த பலவாய இனிய இசைக்கருவிகள் இசைந்து ஒலிக்க, வெறியாடும் களனை இயற்றி, ஆடுதற் கம்ைந்த அழகிய அகன்ற பெரிய பந்தலில், வெள்ளிய

18. திருமுருகாற்றுப்படை : 228-248.