பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலித்தொகை காட்டும் மகளிர் கற்புநெறி 5.3

ளெத்தியுள்ளார். கற்பியவில் இவ்வாறு பொருள் உரைத்த நச்சினார்க்கினியர், பொருளியலில், ‘கற்பாவது, தன்கண்வனைத்தெய்வமென்று உணர்வதோர் மேற் கோள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.”

தொல்காப்பியனார் கற்பைப்பற்றிக் கூ று வ ன வ ற் றைத் தொகுத் து ப் பேராசிரியர் மு. இராகவைங்கார் அவர்கள் பின்வருமாறு எழுதியுள்ளார்:

‘கற்பாவது-கொள்ளுதற்குரிய தலைவன், வேள்விச் சடங்கொடு கூடத் தலைவியை அவள் பெற்றோர் கொடுப்பக் கொள்ளுதலாம்.’’ (142)

கொண்டானிற் சிறந்த தெய்வமின்றெனவும், அவனை இன்னவாறு வழிபடுக எனவும், இருமுது குரவர் (பெற்றோர்) கற்பித்தலாலும், அந்தணர் சான்றோர் அருந்தவத்தோர் கடவுளர் - இவர்க ளிடத்து ஒழுகும் ஒழுக்கத்தைத் தலைமகன் கற்பித் தலாலும், வேதத்தும் சடங்கினும் விதித்த சிறப் பிலக்கணங்களைக் கற்பித்துக் கொண்டு, துறவறத் துச் செல்லுங்துணையும் இல்லற நிகழ்த்துதலாலும் , கொண்ட தலைவனை இன்னவாறு பாதுகாப்பா யென்றும், அவற்கு நீ இன்னவாறு குற்றேவல் செய் தொழுகென்றும் அங்கியங்கடவுள் சான்றாக மந்திர வகையாற் கற்பிக்கப்படுதலாலும் கற்பு’ எனப் படுவதாயிற்று’ என்பர். a

பாலைக் கலியின் முதற்பாடலிலேயே மகளிர்தம் கற்புச் சிறப்பு சுட்டப்படுவதனைக் காணலாம். பொருள்

4. தொல்காப்பியம்; பொருளதிகாரம். நச்சினார்க் கினியம்; கற்பியல், நூற்பா 1, உரை.

5. தொல்காப்பியம்; பொருளதிகாரம்: நச்சினார்க் கினியம்; பொருளியல், நூற்பா 52, உரை.

6. தொல்காப்பியம்; பொருளதிகார ஆராய்ச்சி: 1 J. 84. - ா ,