பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலித்தொகை காட்டும் மகளிர் கற்புநெறி 57

கொல்லை குரல்வாங்கி ஈனா மலைவாழ்நர் அல்ல புரிந்தொழுக லான்.’

மேலும், மலைவாழ் மகளிர், கரிய மலையில் விளையும் மூங்கில் போல அழகமைந்த மென்மையான தோள்களை யுடையவர்; பிறர் வைத்த கண் திரும்ப வாங்க மனமின்றிப் பார்த்துக்கொண்டேயிருக்கச் செய்யும் பேரழகு சான்றவர்: காந்தள் மலரின் மணம் கமழும் உடலினர்; அவர்கள் என்றும் பிழை செய்வதில்லை. அவர்கள் கணவனைத் தொழுதேழும் கற்பு மேம்பாடு உடையவர்கள். அதனால் தான் அவர்களின் அண்ணன்மாரும், தாம் குறி தப்பாது கணைசெலுத்தும் ஆற்றலுடையவராக இருக்கின்றனர் என்றும் கூறித் தோழி, தலைவியின் கற்புச் சிறப்பினை விளங்க எடுத்துரைத்தாள்:

காந்தள் கடிகமழும் கண் வாங்கு இருஞ்சிலம்பின் வாங்கமை மென்றோள் குறவர் மடமகளிர் தாம்பிழையார் கேள்வர்த் தொழுதெழலால்

[தம்மையரும் தாம் பிழையார் தாம்தொடுத்த கோல் ..”

இதனால், கணவன்மர்ாகளின் கடமைத் தொழில்களே அவர்களின் கற்புநெறிச் சிறப்பினால் பிழையாமல் நடை பெறுகின்றன என்பது பெறப்படுகின்றது.

‘நல்ல பெண்கள் நாணத்தால் தலை கவிழ்வது போலத்

தினைக்கதிர்கள் முற்றித் தலை சாய்ந்துள்ளன என்கிறார் கபிலர்:

ZSZSZSTS STS STS STS STS STS STS STS STS STS STS STS STS STS STS STS SZ அமர்க்கண் நகைமொழி நல்லவர்காணும் நிலைபோல் தகை கொண்ட ஏனல்.’

15: 697; குறிஞ்சிக்கலி, 3 : 11-14. 16. கலித்தொகை குறிஞ்சிக்கலி; 3 : 15-19. 17. கலித்தொகை குறிஞ்சிக்கலி; 4 : 1-3.