பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

இலக்கியக் காட்சிகள்


தான் காதலித்த ஆய மகனையே மணந்துகொள்ளும் ஆய மகளின் வாழ்வு இங்குச் சுட்டப் படுகின்றது.

ஆயமகன் கொண்ட காதல் தவறாது அன்னையால் ஏற்றுக்கொள்ளப்படும்; ஏனெனில் ஆயமகளின் தாயும் அவ்வாறான காதல் நெஞ்சம் வாய்ந்தவளே’ என்று உரைக்கின்றாள் தோழி:

ஆயர் மகனாயின் ஆயமகள் யோயின் நின்வெய்ய னாயின் அவன்வெய்யை நீயாயின் நின்னைகோ தக்கதோ இல்லைமன் நின்நெஞ்சம் அன்னைநெஞ் சாகப் பெறின்.28

அதனால் ஆயமகளுக்கு இவ்வுலகில் இப் பிறப்பில் ஒரு மனமே உண்டு. பரந்த திரை விரிகின்ற கடலை உடுத் திருக்கும் உலகமே கிடைக்கப் பெற்றாலுங்கூட , நல்ல கற்பு நெறி பேணுபவர் ஆயர் மகளிராவார். அவர்க்கு இருமணம் கூடுதல் என்பது என்றைக்குமே இல்லறநெறி ஆகா நிலையாகும். -

வளிமணல் முன்துறைச் சிற்றில் புனைந்த திருநுதல் ஆயத்தார் தம்முள் புணர்ந்த ஒருமணங் தான் அறியும் ஆயின் எனைத்துக் தெருமரல் கைவிட் டிருக்கோ அலர்ந்த விரிநீர் உடுக்கை உலகம் பெறினும் அருநெறி ஆயர் மகளிர்க்கு இருமணம் கூடுதல் இல்லியல் பன்றே.”

இதனால் ஒருமனப் பெண்டிர் ஆயர் என்பதும், களவே கற்பாகப் பின் விளக்கமுறுகிறது என்பதும்

26. கலித்தொகை, முல்லைக்கலி;7: 20-23 27. கலித்தொகை, முல்லைக்கலி; 14; 15-21.