பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடக இலக்கியம் 7 I

பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில்

சீகாழி அருணாசலக் கவிராயரின் இராம நாடகம், என்னயினாப் பிள்ளையின் முக்கூடற்பள்ளு நாடகம், திரி கூட ராசாப்பக் கவிராயரின் திருக்குற்றாலக் குறவஞ்சி, சரபேந்திர பூபாலக் குறவஞ்சி, கோபாலகிருஷ்ணபாரதி இயற்றிய நந்தன் சரித்திரம், மாரிமுத்துப் பிள்ளையின் நொண்டி நாடகம் முதலியன நாடக நயஞ்சான்ற தமிழ் நாடக நூல்களாம்.

பெங்களுர் அப்பாவு பிள்ளை இயற்றிய சத்தியபாஷா அரிச்சந்திர விலாசம், காசிவிசுவநாத முதலியார் இயற்றிய டம்பாச்சாரி விலாசம் முதலியன சென்ற நூற்றாண்டில் எழுந்த குறிப்பிடத்தக்க நாடகங்கள், பார்சி நாடகங்கள் நாடகத்துறையில் ஒரு நல்ல முன்னேற்றத்தினைத் தந்தன.

நாடகத்தமிழ் வளர்த்த நல்லவர்கள்

தமிழ் நாடக மேதை சங்கரதாஸ் சுவாமிகள் (18671922) திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்து தம் இருபத்து நான்காவது வயதில் நாடகத்துறையிற் புகுந்து, வேடம் புனைந்து நடித்து, பின் துறவு மேற்கொண்டு, வண்ணம், சந்தம் முதலியன பாடுவதில்,வல்லவராகத் திகழ்ந்து, பல சபாக்களில், நடிப்பாசிரியராக விளங்கி, ஒரிரவிலேயே நான்குமணி நேரம் நடைபெறக்கூடிய நாடகம் முழு வதனையும் அடித்தல் திருத்தல் இன்றிப் பாடல்கள் வசனங் களோடு எழுதி முடிக்கும் திறன் பெற்றவராய் விளங் கினார். தமிழ் நாடகக்கலை வளர்ச்சிக்கு அடிப்படைச் செல்வங்கள் எனக் சொல்லத்தகும் நாடகங்கள் பல வற்றை இயற்றித் தமிழ் நாடகத் தலைமையாசிரியராகக் கொள்ளத் தக்கவராகின்றார். நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்தனார் நீதித்துறையில் உயர் பதவி வகித்தும்,