பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

இலக்கியக் காட்சிகள்


கொண்டார். இவருடைய காலம் கி. மு. 559-கி. மு. 527 என்பர். கி. மு. 776 இல் நிர்வாண நிலை எய்திய பார்சுவ நாதர் அருக சமயத்தின் ஆதி முதல்வர் என்பர். ஆயினும் வர்த்தமானர், பார்சுவநாதர் எனும் இப்பெரியார்களுக்கு முன்னரேயே இந்தியாவில் இருந்த பழஞ் சமயம் சமண சமயம் என்பது உறுதி. யசுர் வேதத்திலேயே இடப தேவர், அஜாத நாதர், அரிட்ட நேமி முதலான தீர்த்தங்கரர்களின் பெயர்கள் காணப்படுவதனால் இச்சமண சமயத்தின் பழமை அறியப்படும்.

பேராசிரியர் அ. சக்கரவர்த்தி நயினார் என்பவர், நீல கேசி நூலின் முன்னுரையில் வான்மீகி முனிவர் இயற்றிய இராமாயணத்திலேயே இராமன் தென்திசைக்கண்போந்த போது சமண சமயத்தவர் வாழ்ந்த ஆசிரமங்களைக் கண் டான் என்று கூறப்பட்டிருப்பதனால், பத்திரபாகு முனிவ ருடன் சந்திர குப்தமெளரியன் தன் வாழ்வின் இறுதிக் காலத்தில் தென்னாடு புகுந்து மைசூரைச் சேர்ந்த சிரவண வேள் குளத்தில் தங்கி வடக்கிருந்து (சல்லேகனம்) உயிர் நீத்தான்; அதனால் அப்போதுதான் சமண சமயம் தென் னாட்டில் புகுந்தது எனும் செய்தி தவறென்பர்.

கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் ஆட்சி ஒச்சிய கங்க வமிச மன்னர்களும், தமிழ் இலக்கிய வரலாற்றில்-தமிழ் நாட்டு வரலாற்றில் இருண்டகாலப் பகுதியெனப் கூறப் படும் சங்க மருவிய காலத்தில் அரசாண்ட களப்பிர மன் னர்களும் சமண சமயத்தைச் சார்ந்தவர்கள் என்றும், அவர்கள் பெரிதும் இச் சமயத்தை ஆதரித்தனர் என்றும் வரலாற்று வழியே அறிய முடிகின்றது.

சமண சமயத்தின் அடிப்படையான சில கொள்கைகள்

இங்கு வாழ்ந்த தமிழர்கள் உள்ளத்தை இறுகப் பற்றின. முதலாவதாகச் சமணசமயம் உ யி ர் க் கொலையினை