பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

இலக்கியக் காட்சிகள்


உயர்த்தும் திருத்தொண்டில் தலைப்படவேண்டும் என்று பாடியுள்ளார்.

இவ்வாறு காலந்தோறும் தமிழகத்தில் தோன்றிய சான்றோர் பெருமக்கள் பரந்துபட்ட உலக நோக்கிலே நின்று, சில வாழ்வியல் உண்மைகளை வலியுறுத்திவிட்டுச் சென்றிருக்கிறார்கள். பன்னெடுங்காலத்திற்கு முன்னரே உலகுயிர் அனைத்தையும் ஓரினமாகக் கண்டு, வாழ்வாங்கு வாழ்ந்த இனம் தமிழினமாகும். இன்றும் தமிழர் தாம் வாழும் அயலிடங்களையெல்லாம் தம் அன்பாலும் அறிவாலும், தொண்டாலும் முயற்சியாலும், பண்பாலும் பயனாலும் உயர்வித்து வருதல் கண்கூடு. எனவே நாமக்கல் கவிஞர் திரு. வெ. இராமலிங்கம் பிள்ளை அவர்களின்,

தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு அமிழ்தே அவனுடை மொழியாகும் அன்பே அவனுடை வழியாகும்

என்ற கூற்று உண்மை; வெறும் புகழ்ச்சியில்லை.