பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசைத்தமிழின் மறுமலர்ச்சி 9 I

குன்றக் குரவை, வாழ்த்துக் காதை முதலிய காதை களில் இனிய இசைப்பாடல்கள் இலங்கக் காணலாம்.

சலம்பூவொடு துன்பம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் மறந்தறியேன்.

(நான் காம் திருமுறை; 1:6)

என்று திருநாவுக்கரசர் பெருமான் பாடுவது கொண்டு, தேவார காலத்தில், திருக்கோயில்கள் தோறும் தாளத் தோடு பொருந்தத் தமிழ்ப் பாடல்களைக் காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கிப் பாடிய சமய குரவர்களின் இசைத் தொண்டினை உணரலாம். ஞானசம்பந்தப் பெரு மான், திருக்கோலக்காவில் இறைவனிடமிருந்தே தாளம் பெற்றதனையும். சுந்தரமூர்த்தி நாயனார், சிவனெனும் நாமம் தனக்கேயுடைய செம்மேனி அம்மானை, ஏழிசை யாய், இசைப்பயனாய், இன்னமுதாய், என் தோழனுமாய்’ என்று பாடியுருகி அழைத்து நின்றதனையும் தேவாரங் கொண்டு அறியலாம். -

பண்களாவன, பாலையாழ் முதலிய நூற்றுமூன்று’ என்பர், திருக்குறளின் உரையாசிரியர், பரிமேலழகர்தேவாரத்தில் அமைந்துள்ள பண்கள், இருபத்து மூன்று என்பர். மேலும் தேவாரத் திருப்பாடல்களில் இடக்கை, உடுக்கை, கத்திரிக்கை, கல்லவடம், கல்லலகு, கினை, குடமுழா, கொக்கரை, கொடுகொட்டி, சல்லரி, தக்கை, தகுணிச்சம், தண்ணுமை, பறை, பிடவம், முழவு, மொந்தை, முரவம் முதலான தோற்கருவிகளும், வேய்ங் குழல் முதலிய துளைக் கருவிகளும், யாழ், வினை முதலான நரம்புக் கருவிகளும், தாளம் முதலிய கஞ்சக் கருவிகளும் இடம் பெற்றுள்ளன.

திருவாசகத்தில் அமைந்துள்ள திருவம்மானை, திருப் பொற் சுண்ணம், திருக்கோத்தும்பி, திருத்தெள்ளேனம், திருச்சாழல், திருப்பூவல்லி, திருவுந்தியார், திருத்