பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசைத்தமிழின் மறுமலர்ச்சி 93

கிடையா என்று வெளிப்படையாகப் பேசும் அளவிற்கு நிலைமை வளர்ந்துவிட்டது.

தேசிய கவி சுப்பிரமணிய பாரதியாரும், ‘வித்துவான் கள் பழைய கீர்த்தனைகளைப் பாடம் பண்ணிப் புராதன வழிகளைத் தெரிந்து கொள்ளுதல் அவசியம். ஆனால் தமிழ்ச்சபைகளிலே எப்போதும் அர்த்தம் தெரியாத பிற பாஷைகளிலே பழம் பாட்டுக்களை மீண்டும் மீண்டும் பாடுதல் நியாயமில்லை. அதனால் நமது சாதி சங்கீத ஞானத்தை இழந்து போகும்படி நேரிடும்’ என்று எச்சரிக்கை விடும் நிலை ஏற்பட்டது.

பாவேந்தர் பாரதிதாசனும்,

‘பாடுவதென்றால் தமிழினில் பாடு பாவையே உளமகிழ் வோடு

என்றும்,

துன்பம் நேர்கையில் யாழெடுத்துகீ இன்பம் சேர்க்க மாட்டாயா’

(இசையமுது; தொகுதி 1, ப. 48)

என்றும் பாடினார். கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை, பற்பல தமிழ்க் கீர்த்தனங்களை இயற்றித் தந்தார். கவியோகி சுத்தானந்த பாரதியாரும், அறிஞர் திரு. பெ. தூரன் அவர்களும் இசைத்தமிழ் வளர்ச்சிக்கு இனிய தொண்டாற்றியுள்ளனர்.

மறுமலர்ச்சி

மீண்டும் இசைத் தமிழ் இருளிலிருந்து ஒளிக்கு வந்திட, இந்த நூற்றாண்டில்- வரலாற்றில் இடம்