பக்கம்:இலக்கியக் கேணி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4. திருத்தொண்டத் தொகை

தோற்றம்

சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவாரூரில் இறைவனருளால் பரவையாரை வாழ்க்கைத் துணைவியாகக் கொண்டார்; நாடோறும் சிவபெருமானுக்கு நல்ல பாமாலைகளைச் சூட்டினார். ஒருநாள் வழக்கம்போல் நம்பியாரூரர் (சுந்தரர்) இறைவனை வணங்கத் தியாகேசப் பெருமான் திருக்கோயிளை அடைந்தார்; அப்போது தேவாசிரிய மண்டபத்தில் சிறப்பு மிகுந்த அளவற்ற அடியார்கள் கூடியிருப்பதைக் கண்டார்; ' 'இவர்களுக்கெல்லாம் நான் அடியவனாம் நாள் எங்காளோ?” என்று எண்ணித் திருமுன் சென்றார். சிவபெருமான் காட்சியளித்து, நம்பியாரூரருக்கு அடியார்களின் பெருமையை,

     'பெருமையால் தம்மை யொப்பார் 
      பேணலால் எம்மைப் பெற்றார் 
      ஒருமையால் உலகை வெல்வார் 
      ஊனமேல் ஒன்று மில்லார் 
      அருமையாம் நிலையில் நின்றார் 
      அன்பினால் இன்பம் ஆர்வார் 
      இருமையும் கடந்து நின்றார் '

என்றருளிச் செய்து, 'இவரை நீ அடைவாய்' என்று பணித்தார். நம்பியாரூரர், 'நான் அவர்களை எங்ங்னம் பாடுகேன்?' என்று வேண்டச் சிவபெருமான், “ தில்லை