பக்கம்:இலக்கியக் கேணி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

இலக்கியக்கேணி

[பொருளாறு நாலும்-ஆறு அங்கங்களும், நான்கு வேதங்களும் : பதியான-பதியில் உதித்த : ஞான முனிவன்-திருஞான சம்பந்தர் : அத்தர்-தந்தை: பியல்தோள் : பனுவல்-பதிகம் : நடுவிருள் ஆடும் எங்தை-சிவபெருமான்: உள்க-கினைத்தால்.]

திருவேதிகுடியில்

திருஞானசம்பந்தர் (ஐந்தாவது தலயாத்திரையில்) காவிரி யாற்றின் வடகரையிலே மேற்கு நோக்கிச் சென்றார் : திருவையாறு முதலிய தலங்களைத் தரிசித்துக் கொண்டே திருநணா*வரையில் சென்று, பின்னர்க் காவிரியின் தென் கரையிலுள்ள தலங்களைத் தரிசித்துக் கொண்டே திரும்பித் திருக்கண்டியூர் திருச்சோற்றுத் துறை முதலிய தலங்களைத் தரிசித்துப் பாடிப் பரவி, வேதியர் வாழும் திருவேதிகுடியை அடைந்தார்; அங்குப் பாடிய பதிகத்தில் பதினோராவது பாடலில் "திருவேதி குடியிலுள்ள சிவபெருமானுடைய திருவடிகளைச் சிங்தை செய்ய வல்லவர்கள் நல்லவர்கள் என்று கருதப் பெறுவார்கள்: அம்மையில் தேவருலகெய்தி அரசாள்வர்: அது உண்மை : “ ஆணை நமது " என்று குறித்தார். அப்பாடல் வருமாறு :-

கக்கம்மலி தண்பொழில்நல் மாட மிடை காழிவளர் ஞானமுணர்சம் பந்தன்மலி செந்தமிழின் மாலைகொடு வேதிகுடி ஆதிகழலே

  • பவானி என்ற தலம்.