பக்கம்:இலக்கியச்சுவை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27

________________

26 நான் கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவன் என்பது உங்களுக்குத் தெரியும். புரட்சிகரமான கருத்துக்கள் உடையவன் நான் என்பது உங்களுக்குத் தெரியும் சுவாமிகளின் கருத்துக்களுக்கும் எனது கருத்துக்களுக்கும் எத்தனையோ முரண்பாடுகள் உண்டு என்பது உங்களு குத் தெரியும். எனினும் நாடகக் கலையில் அவர் ஆற்றிய பெரும் பணி என்னை அவரை வணங்கும்படி சொல் றது எனக் கூறவிரும்புகிறேன். இன்னும் கூறுகிறேன். கலையின் வளர்ச்சி Horizontal ஆகவும், Vertical ஆகவும் ஏற்படுகிறது. வேண்டுமென்றே பொருளைத் துல்லியப்படுத்திக காட்ட ஆங்கிலச் சொற் களில் கூறுகிறேன். இனி இதை விளக்கிச் சொல்கிறேன். கலை சம மட்டமாக வளர்கிறது என்று நான் குறிப்பிடும்பொழுது, ஒவ்வொரு சமுதாய கால கட்டத் நிலும்,கலையின் தரம், திட்ட வட்டமாக வெவ்வேறு விதமாக உருவாகிறது என்று குறிப்பிடுகிறேன். அதாவது ஒவ்வொரு சகாப்தத்திலும் கலையின் உருவமும் உள்ளுரை அம் தெளிவாக மாறுபாடு அடைந்து அந்தந்தக் கால முத்தி ரையுடன் வளர்ந்து முன்னேறி வருகிறது என்று குறிப்பிடுகிறேன். நான் நிலப்பிரபுத்துவ கலைக்கும் முதலாளித்துவக் கலைக் கும் சோஷலிசக் கலைக்கும் இடையில் திட்டவட்டமான வேறுபாடு காணமுடியும் அதோடு கலையின் உருவ மும் உள்ளுரையும் காலத்திற்குக்காலம் முன்னேறி வருவ தையும் பார்க்கமுடியும். ஆனால் இதுபோல் கலையின் செங்குத்தான வளர்ச்சி யில் (Vertical) காலத்துக்குக்காலம். வேறுபாடும் முன்னேற் றமும் தெரிய முடிவதில்லை. செங்குத்தான வளர்ச்சி என்று நான் குறிப்பிடும் பொழுது கலையின் ஆழம் சமை அழகு, அழகுணர்ச்சியின் நிறைவு ஆகியவை களைக் குறிப்பிடுகிறேன். இந்த கலை அம்சங்களில் புதிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/30&oldid=1480298" இலிருந்து மீள்விக்கப்பட்டது