பக்கம்:இலக்கியச்சுவை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31

________________

கம்யூனிஸ்டுகளும் கலை இலக்கியமும் அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம் எனக் கேட்பதுபோலவே, கம்யூனிஸ்டுகளுக்கும் கலை லக்கியத்திற்கும் என்ன சம்பந்தம் என்று சிலர் கேட்கிறார்கள். பாட்டுக்கெல்லாம் ஒரு பாட்டாக விளங்கும் 'கம்யூ னிஸ்டு அறிக்கை'யைத் தயாரித்த மார்க்ஸும் ஏங்கல்சும் உலக லக்கியங்களில் ஆழ்ந்த அறிவுத்திறன் பெற்றவர் களாக விளங்கினார்கள். ஷேக்ஸ்பியர். கத்தே, மில்டன், போன்ற இலக்கிய மேதைகளை நன்கு படித்திருந்தார்கள் என்பதை அவர்களது ஒவ்வொரு நூலிலும் காணலாம். கார்க்கியின் சிகமணி ரஷ்யப் புரட்சித் தலைவர் வெனின், புஷ்கின், செகாவ், டாஸ்டியோவ்ஸ்கி, டால்ஸ் டாய் ஆகியோரைப் புகழ்ந்து போற்றினார் லெனின். ஷேக்ஸ்பியர் பிறந்த நாடான இங்கிலாந்தில் ஷேக்ஸ் பியருக்குக் கிடைக்கும் வரவேற்பைவிட ன்று சோவியத் நாட்டில் அதிக வரவேற்புக் கிடைக்கிறது. இதிலிருந்து தெரிவதென்ன? உலக லக்கியத் றந்தவைகளை எல்லாம் கம்யூனிஸ்டுகள் தம் தாக்கி வளர்க்கிறார்கள். மார்க்ஸ் கூறினார், "எனது அணுகும்முறை விமர்சன பூர்வமானது; புரட்சிகர மானது என்று தக்கன கொண்டு, தகாதன தவிர்ப்பது லக்கியம். சிலருக்காக உள்ள இன்றைய சமுதாயத்தை பலருக் காகச் செய்வது- இதுதான் டால்ஸ்டாயிலும், பூஷ்கினிலும் ஷோலக்காவிலும் பரந்து காணக் கிடக்கும் பார்வை. காலத்தால் பயன்படாதவை அழிந்து போகும். சிறந் அம்சங்கள் - சமுதாயத்தை முன்னேற்றுவதில் நிற்கும் அம்சங்கள் - நிலைத்து நிற்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/34&oldid=1480302" இலிருந்து மீள்விக்கப்பட்டது