பக்கம்:இலக்கியச்சுவை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

________________

கவிமணிக்கு அஞ்சலி கவிமணி மறைந்துவிட்டார்! கவிமணியின் மறைவுச் செய்தி தமிழுணர்வும் தமிழ்ப் பண்பாட்டுணர்ச்சியுமுள்ள மக்களையெல்லாம் மெய்யாகவே சோகக் கடலில் திற்று. ஆழ்த் நாம் துக்கத்தில் ஆழ்கிறோம். ஈடுகட்ட முடியாத நஷ்டத்தை உணர்கிறோம். ஏன்? அவர், 1954 வரையில் வாழ்ந்த, வாழ்கிற.தமிழ்க் கவிஞர்களில் முதல்தரமானவர்களிலும் முதிர்ந்து கனிந்த கவிஞர். பண்பட்ட தமிழ்ப் பேரறிஞர். பாரதிக்குப் பின் மறுமலர்ச்சிக் கவிஞர்களில் தலைசிறந்தவராய் விளங்கிய வர். ஒளவையின் சொற் செட்டோடு, தமிழ் மொழியில் குழந்தைகளுக்கான இன்கவிகளும் அரும் பாடல்களும் பாடியவர்களில் இவருக்கு நிகர் இவரே. தமிழர்களுக்கிடை யில் சாதிமத கட்சிக் குரோதமின்றி யாவரையும் நேசித்த யாவராலும் நேசிக்கப்பட்ட தமிழ்ப் பெரியார் திரு.வி.க. என்றால் தமிழ்ப் பெருங்கவி நமது கவிமணி ஆகும். அவர் திருவிதாங்கூர் தமிழர்களுக்கு இணையற்ற வழி காட்டியாகவும் தலைவராகவும் விளங்கியவர். நாட்டுத் தமிழர்களில் மிக்காருக்கும், சகலவிதங்களிலும் இவர்தான் 'சுப்ரீம் கோர்ட்' தமிழகம் எங்கணுமிருந்து அவரைக் காண வந்த எத்திறத்தாருக்கும் திருப்திகரமாக இனிமையான தமிழ் நல்விருந்தளித்து வந்த வள்ளல் அவர். நாஞ்சில் மரணப் படுக்கையிலும் ஐக்கியத் தமிழகமே சிந்தனை

படுக்கையிலிருந்து கொண்டே போராட்டத்தை - திருவிதாங்கூர் ஐக்கியத் தமிழகப் தமிழகப் போராட் த்டதை கவிமணி எவ்வளவு உயிர் கொடுத்து வளர்த்தார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/43&oldid=1480310" இலிருந்து மீள்விக்கப்பட்டது