பக்கம்:இலக்கியச்சுவை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

கம்பனும்‌ மில்டனும்‌ கம்பன்‌

தமிழ்‌

மொழியின்‌

கவிச்‌

சக்கரவர்த்தி,

மில்டன்‌ ஆங்கில மொழியில்‌ நேர்‌ நிகரற்ற காப்பியப்‌ பெரும்‌ புலவன்‌. மில்டனோடு ஒப்பு நோக்கி கம்பன்‌ பெருமையை வரையறுத்துக்‌ காட்ட முயல்கிறது இந்நூல்‌,

இதுஒரு சிறந்த புது முயற்சி. “கள்ளையும்‌ தீயையும்‌ சேர்த்தே--நல்ல ஈற்றையும்‌ வானவெளியையும்‌ சேர்த்தே தெள்ளு தமிழ்‌ புலவோர்கள்‌-— பல

தீஞ்சுவைக்‌ காவியம்‌ செய்து கொடுத்தார்‌” என்று பாடிய கவியரசன்‌ பாரதிதான்‌,

“யாமறிந்த புலவரிலே... கம்பனைப்‌ போல்‌... பூமிதனில்‌ யாங்கணூமே

பிறந்ததில்லை?! என்று பாடுகிறான்‌. தமிழ்ப்‌ புலவர்‌ மரபு வள்ளுவனையும்‌, கம்பனையும்‌ தான்‌ தெய்வப்‌ புலமை?” (அருட்‌ புலமை) மிக்கவர்‌

கள்‌ என்று அறுதியிட்டு உறுதி கூறி வருகிறது. ஆங்கிலம்‌ வல்ல தமிழ்ப்‌ பேரறிஞர்கள்‌, ஷேக்ஸ்பியருக்‌ கும்‌ ஹோமருக்கும்‌ மில்டனுக்கும்‌ தர உட்க கம்பன்‌ . இளைத்தவனல்ல என்று கூறி வந்திருக்கிறார்கள்‌. வட மொழி வல்ல தமிழ்ப்‌ பெரும்‌ புலவர்களில்‌ சிலர்‌, முதல்‌ நூலாசிரியரான மகாகவி வால்மீகியையும்‌ கம்பன்‌ மிஞ்சு கிறான்‌ என்கிறார்கள்‌.

பன்மொழிப்‌ புலமை சான்றவரும்‌ ஒப்பற்ற விமர்சகரு மாக விளங்கிய வா. வே, சு. ஐயர்‌; கம்பன்‌ உலக மகாகவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/66&oldid=1523024" இலிருந்து மீள்விக்கப்பட்டது