பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

இலக்கியத் தூதர்கள்

மனோன்மணீயக் கதை

சீவகன் என்னும் பாண்டிய மன்னன், தீய நினைவும் திறமான சூழ்ச்சியும் உடைய குடிலன் என்னும் அமைச்சன் வயப்பட்டான். அவன் சொற்படியே மதுரையை விடுத்து, நெல்லையிற் கோட்டையமைத்து, அதன்கண் உறையலானான். சீவகனுக்குக் குல குருவாக விளங்கிய சுந்தர முனிவர், அவனை இடையூற்றினின்றும் காத்தற் பொருட்டு, நெல்லைக் கோட்டையில் தமக்கென ஓர் அறையை வாங்கினர். அதிலிருந்து அரணின் புறத்தேயமைத்த தமது உறையுள்வரை பிறர் அறியாது. சுருங்கை வழி யொன்றை அமைத்தார்.

சீவகன் பெற்ற ஒரே செல்வியாகிய மனோன்மணியும் சேர நாட்டரசன் புருடோத்தமனும் ஒருவரை யொருவர் கனவிற் கண்டு காதல் கொள்கின்றனர். அதற்கு முன்பே மனோன்மணியின் தோழியாகிய வாணியும் பாண்டியன் படைத்தலைவனாகிய நடராசனும் ஒருவரை யொருவர் கண்டு காதல் கொண்டுள்ளனர். வாணியின் தந்தையாகிய சகடன் பொருளாசையால் குடிலன் மகனாகிய பலதேவனுக்கே தன்மகளை மணஞ் செய்விக்கத் துணிந்தான். அதற்குப் பாண்டியன் இசைவையும் வேண்டிப் பெற்றான்.

மனோன்மணியின் மனநிலையைக் கண்ட சுந்தர முனிவர் இளவரசிக்கேற்ற மணவாளன் சேர வேந்தனாகிய புருடோத்தமனே என்று அரசனுக்கு அறிவித்தார். இதனையறிந்த குடிலன், மனஎன்மணியும் அவளுக்குரிய பாண்டிய அரசும் தன் மகன் பல தேவனுக்குக் கிடைத்தலாகாதா என்று பேராசை கொண்டான். உடனே சூழ்ச்சி யொன்றைச் செய்து பல