பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாதவி யினுப்பிய தூதர்

45

என்று பாராட்டினர். கற்பவர் கேட்பவர் உள்ளமெல்லாம் கொள்ளை கொள்ளும் பேராற்றல் அப்பெருங் காவியத்திற்குண்டு என்று நன்றாகக் கண்டு கூறினார் அந்நல்லியற் கவிஞர். இக்காவியத்தின் கனிந்த சுவையில் ஈடுபட்ட கவிமணி தேசிகவிநாயகர், தமிழர் இன்றியமையாது கற்க வேண்டிய ஐம்பேரிலக்கியங் களுள் இதனையும் ஒன்றாக அறிமுகம் செய்து வைக்கிறார்,

‘தேனிலே ஊறிய செந்தமி ழின்சுவை
தேரும் சிலப்பதி காரமதை
ஊனிலே எம்முயிர், உள்ளள வும்நிதம்
ஓதி யுணர்ந்தின் புறுவோமே’

என்பது அக்கவிஞரின் கவிதையாகும். தேனில் ஊறிய தீந்தமிழின் சுவையான பகுதிகளையெல்லாம் தேர்ந்தெடுத்துத் தொகுத்ததொரு பெருநூலே சிலப்பதி காரமாகும். அதனைத் தமிழர் வாழ்நாள் முழுதும் பலகால் ஓதி வளமான இன்பத்தைப் பெறுதல் வேண்டுமென அறிவுறுத்தினர் அக்கவிஞர்.

இளங்கோவின் ஏற்றம்

இத்தகைய நறுஞ்சுவைப் பெருங்காவியத்தைத் தமிழுலகிற்குத் தந்தருளிய செந்தமிழ் வல்லார் சேர நாட்டுப் பேரரசன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் இளைய மகனராவர். இளங்கோவாகிய அவர் இளமையிலேயே துறவு பூண்டு இளங்கோவடிகளென விளங்கிய பெருங்கவிஞராவர்; தூய்மையான துறவு நெறியில் நின்ற வாய்மையாளர்; அறிவு நலங் கனிந்த அரசத் துறவியார். அவர் தமது புலமை நலத்தையெல்லாம் சிலப்பதிகாரக் காவியம் ஒன்றற்கே பயன்படுத்தினார். ஆதலின் முதன் முதல்