பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுளின் பெயரை அடிப்படையாகக் கொண்டு இந்நிகழ்ச்சிக்கு 'வல்கனாக்கல் என்று தாமஸ் குட் இயர் எனும் அமெரிக்கரால், பெயரிடப்பட்டது. வல்கனாக்கலின்போது கந்தகம் ரப்பருடன் விரைவில் சேர்வதற்காக நாக ஆக்ஸைடு ஒரு முடுக்கியாக சேர்க்கப்படும். இதன்பின் கிடைக்கும் ரப்பர் மிக்க வலிமை பெற்று வெப்பநிலை மாறுபாடுகளினால் பாதிக்கப்படாததாக மாறும். - சேர்க்கப்படும் கந்தகத்தின் அளவைப் பொருத்து ரப்பரின் கெட்டித்தன்மை மாறுபடும். அதிக அளவில் கந்தகம் சேர்க்கப் பட்டால் மிக கெட்டியான எபோனைட்’ எனும் ரப்பர் வகை கிடைக்கும். மின்சக்தியை சிறிதும் கடத்தாததாக இது இருப்ப தால் மின் சாதனங்களில் அதிகமாக இது பயன்படுகிறது. மேலும் விலை மிகுந்த ஊற்றுப் பேனாக்கள் (பவுண்டன் பேனாக்கள்) செய்யவும் கூட எபோனைட்’ பயன்படுகிறது. ரப்பரின் கூட்டுதல் நிகழ்ச்சியின்போது கந்தகம் தவிர, வெண் களிமண், மிகச் சன்னமான கரி போன்றவை நிரப்பிகளாக (பில்லர்ஸ்) சேர்க்கப்படும். இதனால் ரப்பரின் அளவு கூடுவதால், உற்பத்திச் செலவு குறையும். வண்ணப் பொடிகளை வல்கனாக்கப்பட்ட ரப்பருடன் சேர்ந்து ரப்பருக்குத் தேவையான வர்ணம் ஊட்டப்படுகிறது. டைட் டேனியம் ஆக்ஸைடு வெண்மை நிறத்துக்கும், குரோமியம் ஆக்ஸைடு பச்சை நிறத்துக்கும், ஈய குரோமேட் மஞ்சள் வண்ணத்துக்கும், ஃபெரிக் ஆக்ஸைடு சிவப்பு வண்ணம் ஊட்டவும் பயன்படுத்தப்படுகின்றன. - ரப்பருக்கு உறுதி அளிக்க மிகச் சன்னமான கரித்துள், பேரியம் சல்பேட் போன்ற பலப்படுத்தும் பொருள்கள் சேர்க்கப்படு கின்றன. கரித்துள் சேர்க்கப்படுவதனால்தான் பெரும்பாலும் ஊர்திகளின் ரப்பர் டயர்கள் கறுமையாக உள்ளன. - பலவகை அளவுகள் கொண்ட துளைகளின் வழியாக கூட்டப்பட்ட ரப்பர் கலவையை அழுத்தத்தில் செலுத்தி ரப்பர் குழாய்கள் பல அளவுகளில் பெறப்படுகின்றன. ஊர்திகளின் டயர்கள், பொம்மைகள் ஆகியவற்றைத் தய்ாரிக்க கூட்டப்பட்ட ரப்பர் தகுந்த அச்சுகளில் (மோல்டு) நிரப்பப்பட்டு, அதிக வெப்பம், அழுத்தம் ஆகியவற்றுக்கு உட்படுத்தப் 58 இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005