பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தில்லை. மனம் நல்லெண்ணத்தால் நிறையும்பொழுது அந்தஸ்து திடீரென உயர்கிறது. ஏன் என நாம் புரிந்து கொள்வதில்லை. சுமுகம் நிறைந்தபொழுது கடை வியாபாரம் பெருகுகிறது. நாம் கவனிப்பதில்லை. நம் வீடு சாதாரண வீடானால், எந்தப் பெரிய காரியமும் பல் ஆண்டுகளாக நடக்காவிட்டால், அனைவரும் சேர்ந்து, உறவை சுமுகத்தாலும், மனத்தை நல்லெண்ணத்தாலும், நெஞ்சைப் பிரியத்தாலும் நிரப்பி, அதைச் சில நாள் நீட்டிப்பது என முடிவு செய்தால், அதை நிறைவேற்றினால், அவ்வீட்டில் கிடைக்காத அட்மிஷன் கிடைக்கும், நில விளைச்சல் உபரியாகும், கடை வியாபாரம் பெருகும், குழந்தைகள் நல்ல மார்க் வாங்குவார்கள், அதிர்ஷ்டத்தின் சுவடுகள் அடிக்கடி தெரியும். இங்கு அன்னையும் சேர்ந்தால் அதிர்ஷ்டம் நிலைபெறும். * - தொழில் (Industry) செய்பவர்களுக்குக் கணக்கு முக்கியம். ரிஜிஸ்டர், ரெக்கார்ட், சிஸ்டம் முக்கியம் என்று அறிவதில்லை. அவையிருந்தால் ஆர்டர் அதிகமாக வரும் என்று காண்பதில்லை. தொழிலில் உள்ளவர் பணத்தையும், ஆர்டரையும் நாடுகின்றனர். அவர்கள் கணக்கு, ரிஜிஸ்டர், ரெக்கார்ட், தொழிலாளியின் உற்சாகம், ஒத்துழைப்பை நாடினால் ஆர்டர் குவியும், லாபம் பெருகும். மனிதனுக்குத் தன் திறமை தெரிவதில்லை என்பது போல் தொழிலதிபர்களுக்குத் தொழிலின் வலிமை தெரிவதில்லை. குடும்பத்தில் ஒற்றுமை, சேர்ந்து செயல்படுவதில் சிறப்பு, பிரியம், சேமிப்பு, பத்திரம், கடமை... இவற்றின் முக்கியத்தை அறியாமல், அவரவர் இஷ்டப்படி, வறண்ட உள்ளத்துடன், கடமைகளைப் புறக்கணித்து, சேமிப்பைக் கருதாது, பத்திரத்தைப் பத்திரமாக வைக்காமல், சிரமப்படுகிறார்கள். குடும்பத்தின் வலிமையை உணர்ந்தால் குடும்பம் சிறப்பாக இருக்கும். ஆசிரியர், டாக்டர், வக்கீல் (professionals) போன்றவர் களுக்குத் தொழிலுக்குரிய படிப்பின் முக்கியம், குறித்த நேரத்தில் செயல்படுவது, தொழிலுக்குரிய முறைகள், இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005 85