பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவர், இப்போது என்ன செய்கிறார்? கவியாற்றல் மிக்க ஆற்றலரசு ஈரோடு ஆற்றலரசு சிறந்த கவிஞர். எனக்குத் தெரிந்து இவர் சென்ற இருபதாண்டுகளாக எந்த நிறுவனத்திலும் பணிபுரியாமல் யாரை அண்டியும் உதவி கேட்காமல் நமக்குத் தொழில் கவிதை' என்று இலக்கியத் தொண்டாற்றி வருகிறார். நாற்பத்தைந்து ஆண்டுகளாகக் கவிதை எழுதி வரும் இவர், பல பேரறிஞர்களுடன் பழகியவர். அறிஞர் அண்ணா அவர்கள் இவர் கவிதைகளைப் பாராட்டியிருக்கிறார். முதல் கவிதை 'திராவிட நாடு இதழில் வெளிவந்தது. கவிஞர் கண்ணதாசனும், ஈரோடு ஆற்றலரசும் சிறந்த நண்பர்கள். 400 நிலா கவிதைகளைத் தொகுத்து நிலா நானூறு எனும் தொகுப்பை உருவாக்கினார். கவிஞர் கண்ணதாசன் அதற்காக 'ஒன்பதாம் தொகையார் என்ற பட்டமளித்து வாழ்த்தினார். - கவிஞர் சுரதாவுடன் நெருங்கிப் பழகிய ஆற்றரலசு, பாவேந்தர் பரம்பரைக் கவிஞர்களுள் ஒருவர். கவிதையை இசையுடன் பாடினால் ஏற்படும் இன்பத்திற்கு எல்லையில்லை. முதன் முதலில் நான் ஆசிரியராகப் பணியாற்றிய 'அமுதசுரபி'யின் செங்கல்பட்டு மாவட்ட மலர் வெளியீட்டு விழாவை, காஞ்சி நகரில் நடத்தினோம். அந்த விழாவில் காஞ்சிப் பட்டைப் பற்றிய அருமையான கவிதை யைத் தாளமிட்டுப் பாடியதைக் கண்டு பலரும் பாராட்டினர். அந்தச் சம்பவம் நடந்து முப்பத்தி மூன்றாண்டுகளுக்கு மேலாகியும், இசை யுடன் பாடியது இன்றளவும் ரீங்காரமிட்ட வண்ணமிருக்கிறது. கவியரங்கத்தில் தன் கவிதையை அவர் ராகத்துடன் பாடும் விதமே தனி. ஆற்றலரசு சிறந்த ஜோதிடர். சொன்னவை பலிக்கும். அந்த ஆற்றல்தான் அவருக்குச்சோறு போடுகிறது என்று கூறலாம். பல ஆண்டுகளுக்கு முன்பு, இப்போது புரட்சிக் கலைஞராகப் பாராட்டப்படும், விஜயகாந்த் பாண்டிபஜாரில் நடிப்புலகில் நுழைய முயன்று கொண்டிருந்த நேரம். அவரது எதிர்காலத்தைக் கணித்து 'அமுதசுரபி'யில் எழுதினார். பலித்தது. மிக மிகப் பலித்தது. 94 இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005