பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்

35



தேகத்தின் சக்தியைத் திரட்டுகிற வகைகள் எத்தனையோ! நல்ல சத்துணவு, நலமான பழக்க வழக்கங்கள்; உண்மையான உழைப்பு; உன்னதமான உறக்கம்.

இவை எல்லாவற்றிற்கும் மேலானதாக விளங்குவது உடற்பயிற்சிகள் தாம்.

உடற் பயிற்சிகள்

உடற்பயிற்சிகள் என்பது உடல் உறுப்புக்களைப் பதப்படுத்தி, பலப்படுத்தி,தேகத்தைக் காக்கும் தெய்வத் துணைகளாக விளங்குகின்றன.

என்ன தான் தேகத்தின் சக்தியை, கிளை கிளையாக ஒடித்தாலும், அதனை மீண்டும் வளர்க்கின்ற சக்தியை விளைவித்துக் கொள்ள வேண்டாமா!

மிகைப்படுத்துகிற உணர்ச்சிகளினால், வீழ்த்தப்படுகிற தேகத்தின் சக்திகளை மீட்டுத் தருகிற, திரட்டித்தருகிற, மேன்மைமிகு காரியம்தான் உடற்பயிற்சிகளாக வந்து உதவுகின்றன.

மரம் ஒடிந்தால்

மரம் ஒடிந்தால், பட்டுப் போகின்றன. கட்டையாகி விடுகின்றன. அது போலவே உடலின் சக்தி ஒழிந்தால், உறுப்புகள் கெட்டுப் போகின்றன. செயலில் கீழ்தரமாகி விடுகின்றன. தோற்றத்தில் மாற்றம் பெற்று, தூற்றப்படு கின்ற அளவுக்குத் தாழ்ந்து போகின்றன.

'நல்லகனி கொடாத மரமெல்லாம், வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும். இந்த மரங்களின் வேர் அருகே, கோடாரி வைத்திருக்கிறது' (மத்.3.10) என்று கூறுகிற பைபிள் கருத்தைப் படியுங்கள்.