பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 இலக்கிய அமைச்சர்கள் கும் பரவத் தொடங்கியது. கற்ருேரெல்லாம் பற்றுடன் அந்நூலைப் படித்து இன்புற்று வந்தனர். பொய்யே புனைந்துரைக்கும் அந்நூல் கதையினை மன்னனும் மக்களும் மகிழ்ந்து கேட்டனர். நெல்லிருக்கவும் உமியைக் குத்திக் கை வருந்துவது போலவும், கறவைப் பசு இருக்கவும் மலட்டுப் பசுவைக் கறந்து மனந்தளர் வது போலவும், குளிர்ந்த சோலை வழியிருக்கவும் சேறு நிறைந்த குழியில் விழுந்து அழுந்துவது போலவும், இன்சுவைக் கரும்பிருக்கவும் இரும்பைக் கடிப்பது போலவும், விளக்கிருக்கவும் மின்மினியிடத்தே தீக் காய்ந்தவாறு போலவும் சோழநாட்டு மக்கள் அனை வரும் சிந்தாமணிக் காவியத்தில் தங்கள் சிந்தையைச் செலுத்தினர். அநபாயன் சிவபத்தன் சோழ மன்னகிைய அநபாயன் சிறந்த சிவ பத்தன். தில்லைக் கூத்தப் பெருமானிடத்து எல்லையற்ற பத்தி பூண்டவன். இவன் புவனமுழுதுடையாள் என்ற இராசமாதேவியுடன் தில்லைக்குச் சென்று கூத்தப் பெருமானை வழிபட்டான். ஆங்குத் தேரோடும் திரு வீதிகளைப் பொன்னகரப் பெருவீதிகளாகப் பொலிவுறச் செய்தான். கூத்தப் பெருமான் திருநடம் புரிந்தருளும் பேரம்பலத்திற்குப் பொன்வேய்ந்து புதுப்பித்தான். இத்தகைய அரசர் பெருமானைக் கூத்தப் பெருமான் திருவடித் தாமரையில் உள்ள தேனைப் பருகும் ஈப் போன்றவன் ' என்று திருவாரூர்க் கல்வெட்டுக் குறிக் கின்றது. அமைச்சர் அறிவுரை சிவனேசச் செல்வனுய் விளங்கும் அநபாயன் சமண காவியமாகிய சிந்தாமணியிடத்து மிகுந்த பற்றுக்