பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 இலக்கிய அமைச்சர்கள் " நீவிர் நீதியுரைத்தீரல்லீர், ! பழுதுரைத்தீர்" என்று கூறி எரியிடைப்பட்ட கமலம்போல் முகம் வாடின்ை. "நீவிர் அறநெறியின் உண்மையை ஆராயாது கூறு கின்றீர்; எவ்வுலகில் எப்பசு இத்தகைய இடரால், துய ருற்றுக் கதறியது ? அத்துயரை மன்னனிடம் அறிவிக்க மணியை அசைத்து ஒலியெழச் செய்ததும் உண்டோ? கூறுங்கள் ; சிவபிரான் விரும்பியுறையும் திருவாரூரில் பிறந்த உயிரை என் மகன் கொன்ருனுதலின் அதற்குத் தண்டனையாக அவனைக் கொல்லுவதே அறமாகும் என்பதை உணர்மின்; இப்பசுவின் துயரகற்ற இய லாத யான் அது பெற்றுள்ள பேரிடரை யானும் பெறு வதே தருமமும் கருமமும் ஆகும்,' என்று சினத்துடன் பேசினன். அமைச்சன் இறப்பும் அரசன் சிறப்பும் மனுவேந்தன் துணிவைக் கண்ட மதியமைச்சர் கள் பெரிதும் அஞ்சி அகன்றனர். அரசன் அவருள் ஒருவனை அருகழைத்து, " அமைச்ச! முதற்கண் நம் அரசகுமரனைக் கன்று உயிர் நீத்த அதே வீதிக்குக் கொண்டு சென்று அவனை நிலத்திற் கிடத்தி அவன் மேல் தேரைச் செலுத்துக!' எனப் பணித்தான். அவ் அமைச்சனே அவ்வாறு செய்ய விழையாது, தன் ஆருயிர் போக்கினன். அச்செய்தி உணர்ந்த மனு வேந்தன் தன் மைந்தனைத் தானே அழைத்துக் கொண்டு அரச வீதியை அடைந்தான். குலத்திற் கொரு மகளுக விளங்கிய வீதிவிடங்கனை நிலத்தில் கிடத்தின்ை. தானே தேரின்மீது ஏறி மைந்தன்மீது தேரைச் செலுத்தின்ை. அறத்தின் வழிச் செல்வதே அரசன் கடமை என்று கருதினன். குற்றம் புரிந்தவன்