பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{0 இலக்கிய அமைச்சர்கள் நிலையும் நாட்டின் கேடும் கண்டு கவன்று கொண் டிருந்த அரசியார் இதுவே தக்க சமயம் என்று துணிந் தார். திருஞானசம்பந்தர் மதுரைக்கு எழுந்தருளில்ை நாட்டில் பரவிய சமணிருள் அகலும், சைவப் பேரொளி நிலவும் என்று நம்பினர். உடனே அப்பெருமானைத் திருமறைக்காட்டில் சென்று கண்டு செய்தி கூறி அழைத்து வருமாறு ஆளனுப்பக் குலச்சிறையாருக்கு ஆணையிட்டார். திருமறைக் காட்டில் ஏவலாளர் அரசியாரின் ஆணையைச் சிரமேல் தாங்கிய குலச் சிறையார், திருஞான சம்பந்தரை அழைத்து வருமாறு திருமறைக்காட்டிற்கு ஏவலாளர் சிலரை அனுப்பினர். அவர்களும் திருமறைக்காட்டை யடைந்து பாண்டிமா தேவியாரும் பைந்தமிழ் அமைச்சராகிய குலச்சிறை யாரும் கூறியனுப்பிய செய்தியைப் பணிவுடன் மொழிந் தனர். பாண்டிநாட்டில் சைவப் பேரொளி பெருகுமாறு தேவரீர் எழுந்தருள வேண்டும் என்று பணிவுடன் வேண்டி நின்றனர். அவர்கள் வேண்டுகோளை நிறை வேற்றத் திருஞான சம்பந்தர் திருவுளம் பற்றினர். உடனே தமது கருத்தினை உடனிருந்த திருநாவுக் கரசரிடம் தெரிவித்தார். திருநாவுக்கரசர் சம்பந்தரைத் தடுத்தல் அதுகேட்ட திருநாவுக்கரசர் தி டு க் கி ட் டார். "அந்தோ! கொல்லாமை மறைந்தொழுகும் பொல்லாத சமணர்கள் எதற்கும் அஞ்சாத கன்னெஞ்சம் படைத்த வஞ்சகரன்ருே இளம் பிள்ளையாராகிய திருஞானசம்பந் தர் அவண் சென்ருல் அவருக்கு யாது நேருமோ ?”