பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

120 5. பூங்குன்றம்: படிக்குந்தோறும் மிக்க இன்பத்தை விளைவிக்கும் இயல்பு வாய்ந்த 'யா துமுரே யாவருங் கேளிர்' என்ற 192-ஆம் புறப்பாட்டை இயற்றிய புலவர் பெருமான் இவ்யூரினர் ஆவர். இது பாண்டி மண்டலத்தின் உள் நாடுகளுள் ஒன்றாகிய பூங்குன்ற நாட்டிற்குத் தலை நகர் என்பது 'பூங்குன்ற நாட்டுப் பூங்குன்றமும் என்ற அல் வெட்டுப் பகுதியினால் பெறப்படுகின்றது. இராமநாத புரம் சில்லா திருப்புத்தூர் தாலுகாவிலுள்ளதும், இருபெரு மொழியிலும் நுண்மாணுழைபுலம் படைத்த புலவர் பெரு மானாகிய மகாமகோபாத்தியாய - பண்டிதமணி அவர்கள் தோன்றியதுமாகிய மகிபாலன்பட்டியே இப்பூங்குன்றம் என்பது அங்குள்ள குகைக்கோயிலில் காணப்படும் கல்வெட்டொன்றால் புலப்படுகிறது. அது, 'ஸ்வஸ்திஸ்ரீ கோச்சடைய வர்மரான திரிபுவனச்' சக்ரவர்த்திகள் எம்மண்டலமுங் கொண்டருளிய ஸ்ரீசுந்தர பாண்டிய தேவர்க்கு யாண்டு 10-ஆவது சிங்க நாயிற்று அமர பக்ஷமும் துதியையும் திங்கட்கிழமையும் பெற்ற பூரட்டாதி நாள் உடையார் குலசேகா, ஈஸ்வரமுடைய நாயனார் தேவதானம் பூங்குன்ற நாட்டுப் பூங்குன்றத் துடையார் திருப்பூங்குன்றமுடைய நாயனர் ஆதிசண்டே சுவர நாயனார்க்கு இந்நாட்டு நாட்டவரோம் பிரமாணம் பண்ணிக் கொடுத்த பரிசாவது' என்பதாம். 2 6, வஞ்சிமாநகர்: இது சேரர் தலை நகர்; சேர நாட்டில் தண்பொருநை ஆற்றங்கரையில் உள்ளது. தாராபுரத் திற்கும் கொங்கு நாட்டுக் கருவூர்க்கும் வஞ்சி என்ற 1. Inscriptions of the Pudukkottai State No. 588. 2. கலைமகள் - தொகுதி 3, பக்கங்கள் : 226-27.