பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

139 பொறையின் மகன் ஆவன், எனவே, இறுதியிலுள்ள முன்று பத்துக்களும் செல்வக்கடுங்கோ வழியா தன் அவன் புதல்வன். அவன் பேரன் ஆகிய மூவர் மீதும் பாடப் பட்டவையாகும். இது போது கிடைக்காத இறுதிப் பத்து. யாணைக் கட்சேய் மாந்தாஞ்சேர விரும்பொறையின் மீது பாடப்பெற்றிருத்தல் வேண்டும் என்று சிலர் கருது கின்றனர். அதனை ஒருதலையாகத் துணிதற்கு இயலவில்லை. ஆகவே, அஃது இன்னும் ஆராய்தற்குரிய தொன்றாகும். இனி, அச்சேரமன்னர் தம்மைப் பாடிய புலவர் பெரு மக்கட்கு வழங்கியுள்ள பரிசில்ககா நோக்குவாம், இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன், குமட்டூர்க் கண்ணனார்க்கு உம்பற் காட்டில் ஐந்நூறு ஊர்கணைப் பிரமதாயமாக வழங்கியதோடு தென் குட்டு வருவாயுள் சில ஆண்டுகள் - வரையில் பாகமும் அளித்தனன். அந்தணர்க்குக் கொடுக் கப்படும் இறையிலி நிலங்களே பிரமதாயம் என்று சொல்லப்படும். அவை பிரமதேயம் எனவும் பட்டவிருத்தி எனவும் முற்காலத்தில் வழங்கப்பட்டன என்பது பல கல்வெட்டுக்களால் அறியக்கிடக்கின்றது. செல்வக் கடுங்கோ வாழியாதன், கபிலர்க்குச் சிறுபுற மாக தூருயிரம் பொற்காசும், நன்று என்னும் குன்றின்மேல் ஏறி நின்று தன் கண்ணிற் கண்ட நாடுகளையும் வழங் கினான், அவ் வேந்தனுடைய பேரன் இளஞ்சேரலிரும் பொறையைப்பாடிய பெருங்குன்றூர் கிழார், 'உவபைகூராக் கவலையினெஞ்சின்- தனவிற்பாடிய தல்லிசைக்-கபிலன் பெற்ற ஆரினும் பலவே' என்று பதிற்றுப்பத்தின் எண்பத் தைத்தாம் பாடலில் கூறியிருத்தலால் புலவர் பெருமா னாகிய கபிலர் சேர நாட்டில் பிரமதேயமாகப் பெற்ற