பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

142 காங்குக் கிடைக்கும் சான்றுகளால் தெள்ளிதிற் புலனா கின்றன. பல்யானைச் செல்கெழுகுட்டுவன் தன்னைப் பாடிய பாலைக்கொதமனார் பொருட்டுப் பத்துப் பெருவேள் விகள் நடப்பித்து அவர்க்கு விண்ணுலகம் அளித்த வரலாறு மலை நாட்டில் இக்காலத்தும் செவிவழிச் செய்தியாக வழங்கி வருகின்றது. இமயவரம்பன் நெடுஞ்சேர லா தன்பால் குமட்டுர்க் கண்ணனார் பிரமதேயமாகப் பெற்ற ஐந்நூறுமார்களையும் தன்னகத்துக் கொண்டதும் செங்குட்டுவன்பால் பரணர் வருவாய் பெற்றதும், ஆகிய உம்பற்காடு, பிற்காலத்தில் வேழக்காடு என்ற பெயருடன் நிலவியது என்பது செப்பேடுகளாலும் கல்வெட்டுக் களாலும் அறியக் கிடக்கின்றது. அன்றியும், சேர நாட்டி லுள்ளனவாகச் செப்பேடுகள் கல்வெட்டுக்கள் முதலான வற்றால் உணரக்கிடக்கும் பரணன் கானம், கண்ணன்காடு, கண்ணன் நாடு காக்கையூர் ஆகிய ஊர்கள், பரணர், குமட்டூர்க் கண்ணனார், காக்கைபாடினியார் நச்சென்ளையார் என்ற புலவர் பெருமக்களுக்கும் மலை நாட்டிற்கும் ஏற்பட் டிருந்த பண்டைத் தொடர்பினை நன்கு விளக்கி நிற்றல் காண்க. இனி, பதிற்றுப்பத்திலுள்ள பாடல்களுக்குப் பெயர்கள் இடப்பெற்றிருத்தலைப் பதிகங்களின் இறுதியிற் காணலாம். அப்பெயர்கள் எல்லாம் ஒவ்வொரு பாட்டிலுங் காணப்படும் பொருள் நயம் பொருந்திய அருந்தொடர்களா யிருத்தல் அறியத்தக்கது. இங்ஙனமே, சங்கத்துச் சான்றோர் சிலர், தம் செய்யுட்களில் அமைத்துப் பாடி புள்ள . சில அருந்தொடர்களைத் தம் பெயர்களாகக் கொண்டு விளங்கியமை, புறநானூறு, குறுந்தொகை முதலான சங்க நூல்களால் நன்கு புலனாகின்றது. அவர்