பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பல நலங்கள் புரிந்தனனேயன்றி வேறு ஒன்றும் செய்த தாகத் தெரியவில்லை என்பது. இதனாலும் இவன் சிறந்த சிவபத்தன் என்பது இனிது புலப்படுதல் காண்க. இவ்வேந்தன் தன் மனைவியோடு திருவாரூருக்குச் சென்று புற்றிடங்கொண்ட முக்கட்பெருமானை வணங்கித் திருக்கோயிலில் வலம் வருங்கால் இவனது மனையாள் பூக்கள் தொடுக்கப்படும் இடத்திற்குச் சென்று ஒரு மலரை எடுத்து மோந்து பார்க்க, அங்கிருந்த சிவனடி யாராகிய செருத்துணையா ரென்பார் அதனைப் பொருது அவளது மூக்கை வான்கொண்டு அறுத்தலும், பின்னர் அங்கு வந்த அரசன் தன் மனைவி செய்த குற்றம் மிகப் பெரிது என்று அவ்வடியாரிடம் கூறியதோடு அவள் அம்மலரை எடுத்தமைக்குக் காரணமாயிருந்த கையினையும் வெட்டி வீழ்த்திஞன் என்று பெரிய புராணம் கூறுகின்றது. இவ்வரலாற்றால் இவனது சிவபத்தி எத்தகைய சிறப்புடையதென்பது ஒருவாறு நன்கு புலப்படும். இவன் காஞ்சியில் கைலாய நாதர் கோயில் எடுப்பித்த நாளில் தான் திருநின்றவூரில் வாழ்ந்த பூசலார் நாயனார் சிவபெருமானுக்கு மனக் கோயில் கட்டிகுரென்பது ஆராய்ச்சியாளரது கொள்கை யாகும். சிவபெருமான். தாம் பூசலாரது மனக்கோயி ஓக்கு முதலில் எழுந்தருள வேண்டியிருந்தமையின், அரசன் எடுப்பித்த கற்கோயிலுக்குக் கடவுண்மங்கலஞ் செய்யக்குறிப்பிட்டிருந்த நாளைமாற்றி அதனை வேறொரு நாளில் செய்யுமாறு அவன் கனவில் கூறியருளினாரென் பதும் பிறவும் பெரியபுராணத்தில் காணப்படுஞ் செய்தி களாம். ஆகவே, இவ்வேந்தன் எடுப்பும் இனேயு மற்ற சீரிய சிவபத்தனாய் அந்நாளில் நிலவினானென்பது