பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

31) சிற்றம்பலத்தைப் பொன்வேய்ந் திருத்தல்வேண்டும் என் பது நன்கு துணியப்படும். இவன் காவிரியாற்றின் இரு மருங்கும் பல சிவலாயங்களைக் கற்றளிகளாக அமைத்த சிவபக்தன் என்று அன்பிற் செப்பேடுகள் ! கூறுவது ஈண்டு அறியத்தக்கது. இனி, இவ்வாதித்தன் புதல்வன் முதற்பராந்தக சோழன் என்பான் தில்லைச்சிற்றம்பலத்தைப் பொன்வேய்ந் தான் என்று ஆனைமங்கலச்செப்பேடுகளும் 2 திருவாலங் காட்டுச்செப்பேடுகளும் உணர்த்துகின்றன. கொங்கு தேச ராசாக்கள் சரிதமும் இச்செய்தியை உறுதிப்படுத்து கின்றது. எனவே, முதற் பராந்தகசோழனது ஆட்சிக் காலத்திலும் தில்லைச்சிற்றம்பலம் மீண்டும் பொன்வேயப் பட்டது என்று கொள்வதேபொருத்தமுடையதாகும். அங் கனமே, முதற்குலோத்துங்கசோழனது ஆட்சியின் 44-ம் ஆண்டாகிய கி. பி. 1114-ல் அவன் தங்கை குந்தவை யென்பாள் தில்லைக்கோயிலைப் பொன்வேய்ந்தனள் என்று அக்கோயிற் கல்வெட்டொன்று அறிவிக்கின்றது. அவன் மகன் விக்கிரமசோழன் என்பான் கி. பி. 1128-ல் சிற்றம் பலத்தைச்சூழ்த்த திருச்சுற்றுமாளிகையையும் திருக் கோபுரத்தையும் பொன்வேய்ந்தான் என்று அவன் பொய்க் கீர்த்தி கூறுகின்றது 5 அவன் படைத்தலைவனாகிய மண விற்கூடத்தன் காலிங்கராயன் என்பவன் தில்யேயிற் பொன்னம்பலத்தைப் பொன்வேய்ந்தான் என்று அங் TEp. Ind. Vol, XV, No. 5. Verse 18. 2lbid. Vol. XXII, No. 34. Verse 17. 3s. 1. 1. Vol. III. No. 205. Verse 53. 4Ep. Ind. Vol. V. No. 13. C. 5S. I. I. Vol. V. No. 458.