பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

65 அன்பை உண்டுபண்ணுவது என்ற பொருளைத் தரும் என்றும் உரைப்பர். மற்றுஞ்சிலர் அதனையே தே+ஆரம் எனப்பிரித்து அது கடவுளுக்குச் சூட்டப்பெறும் பாமாலை என்ற பொருளையுணர்த்தும் என்று கூறுவர். ஈண்டு ஆரம் என்பது ஹாரம் என்ற வடசொல்லின் திரிபென்பது அன்னோர் கருத்து. இவையெல்லாம் சொல் கிடந்த முறையில் அவர்கள் கண்ட பொருளே எனலாம். அதன் உண்மைப்பொருளையுணரவேண்டின் அது முற்காலத்தில் எப்பொருளில் வழங்கப்பட்டுள்ளது என்பதை ஆராய்வது இன்றியமையாததாகும். சமயகுரவர்களா தல் ஒன்பதாந் திருமுறையா சிரியர்களாதல், பட்டினத்தடிகன், நம்பி யாண்டார் நம்பி ஆகிய பெரியோர்களாதல் தேவாரம் என்னுஞ் சொல்லத் தம் பாடல்களில் யாண்டும் குறித்தா ரில்லை. சேக்கிழாரும் தம் பெரிய புராணத்தில் அச்சொல்லை எடுத்தாளவில்லை. ஆகவே பட்டினத்தடிகள், நம்பி யாண்டார் தம்பி, சேக்கிழார் ஆகிய சைவப் பெரியார் காலங் களில் முவர்பாடல்கள் தேவாரம் என்று வழங்கப்பட வில்லை என்பது தெள்ளிது. எனவே சேக்கிழார்காலத் திற்குப்பிறகே அவை தேவாரம் என்ற பெயரை எய்தி யிருத்தல் வேண்டும் என்பது தேற்றம். இனி அப்பாடல்களைத் தேவாரம் என்ற பெயருடன் தமிழ் நூலில் முதலில் வழங்கியவர் பாவரெனின் அன்னோர் புலவர் பெரு மக்களாகிய இரட்டையரேயாவர். அவ்வுண் மையை அவர்கள் பாடிய ஏகாம்பரநாதருலாவிலுள்ள, 'மூவாத பேரன்பின் மூவர் முதலிகளும் தேவாரஞ் செய்த திருப்பாட்டும்' என்ற அடிகளால் அறியலாம். அவர்கள் தம் உலாவில் மல்லிநாத சம்புவராயனைப் பாராட்டியிருத்தலால் அவ்