பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தனி அதிகாரி ஒருவன் அரசரும் அமர்த்தப்பெற் திருந்தான் என்று உறுதிசெய்துவிடல் ஏற்புடைத்தன்று. அன்றியும், ஸ்ரீகாசியஞ்செய்வோரையும் கண்காணித்தற் பொருட்டு 'ஸ்ரீகாரியக்கண்காணிதாயகம்' என்ற தலைமை யதிகாரி ஒருவன் அக்காலத்தில் இருந்தமை குறிப்டேத் தக்கது. இனி, தேவார நாயகம் என்போன் சிவன் கோயில் களில் திருப்பதிகம்பாடுவோரைத்தான் கண்காணித்தல் கூடும். அங்கனமாயின் திருமால்கோயில்களில் திருவாய் மொழி முதலானவற்றைப் பாடிவந்தவர்களைக் கண்காணித் தவன் ஒருவன் இருத்தல்வேண்டுமன்றே? சோழமன்னர் களின் ஆட்சிக்காலத்தில் திருமால்கோயில்களில் திருவாய் மொழி பாடப்பெற்றுவந்தமை பல கல்வெட்டுக்களால் அறியக் கிடக்கின்றது. ஆனால், அந்நிகழ்ச்சிகளைக் கண் காணித்தற்குத் திருவாய்மொழி நாயகம் என்ற அதிகாரி இருந்ததாகத் தெரியவில்லை. ஆகவே, தேவாரநாயகம் என்பவன் வேறோர் அலுவல்புரித் துவந்த அதிகாரியா பிருத்தல்வேண்டும் என்பது திண்ணம். அரசன் நான் தோறும் தன் அரண்மனையில் நிகழ்த்திவந்த வழிபடு கடவுள் பூசையில் அதற்குரிய பணிகளை ச்செய்து வந்தபணிமக்களைக் கண்காணிக்கும் அலுவல்பார்த்த அதிகாரியே தேவார நாயகம் என்று வழங்கப்பெற்றனன் என்பது துணுகியாராயுமிடத்து நன்கு புலனாகின்றது. எனவே, அரசனது தாள் வழிபாட்டிற்குரிய பணிகளை மேற்பார்ப்பவன் என்பதே அத்தொடரின் பொருளாகும். அதிலுள்ள தேவாரம் என்ற சொல் வழிபாடு என்று பொருள்படுதல் அறிக. 1. Ibid, No. 36.