பக்கம்:இலக்கிய தீபம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய தீபம் 1. இருவகை இலக்கியம் தமிழ் மக்கள் உள்ளத்தில் அகம், புறம் என்ற பொருட் கூறுபாடு வேரூன்றி விட்டது. பண்டைத் தமிழ்- இலக்கிய ஆராய்ச்சியாளர்கள் இவ் இருவகை இலக்கியங்களைப் பற்றி எழுதியெழுதி, அவ் வகைகளைத் தவிர வேறு பாகுபாடுகளைக் குறித்து எண்ணுவதற்குக்கூட நமக்கு மனவலிமை: யில்லாதபடி செய்துவிட்டார்கள். ஆகவே, இருவகை இலக் கியம் என்றால், அகப்பொருள் பற்றிய இலக்கியம், புறப் பொருள் பற்றிய இலக்கியம் என்றுதரன் பொதுப்படக் கருதுவோம். முன்னது காதல் துறைகளையும், பின்னது போர், ஈகை முதலியவற்றிற்குரிய துறைகளையும் பொரு ளாகக் கொண்டவை. இப் பாகுபாட்டினைக் காட்டிலும் மிக ஆழ்ந்து செல் லும் வேறொரு பாகுபாட்டினையே ' இருவகை இலக்கியம்" என்ற தலைப்புத் தொடர் இங்கே கருதுகிறது. இலக்கியம் என்பது ஒரு கலை {art). இக்கலை கலைஞன் உள்ளத்தில் தோன்றும் முறை தனிப்பட்டது; இலக்கியமாகப் பா மிக்கும் முறையும் தனிப்பட்டது; இதன் நோக்கமும் தல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/10&oldid=1453054" இலிருந்து மீள்விக்கப்பட்டது