பக்கம்:இலக்கிய தீபம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

110 இலக்கிய தீபம் மக்களது துரதிர்ஷ்டமே யாகும். இப்பெருநூல் ஆராய்ச்சி முறையித் செப்பஞ் செய்யப்பெற்சத் திருந்திய பதிப்பாக வெளிவருதலைத் தமிழறிஞர்களனைவரும் பெரிதும் அவாவி யெதிர்நோக்கி யிருக்கின்றனர். இவ் வேணவா விரைவில் நிறைவேற இறைவன் அருள்புரிக. சென்னை ஸர்வ கலா சங்கத்தார் இந்நூலைத் திருத்தமுறப் பதிப்பித்து வெளியிட வேண்டுமென்று மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாத ஐயரவர்கண் வேண்டிக்கொண்டிருப்பதாகத் தெரி கிறது. இச்சற்செய்தி தமிழ் மக்களுக்கும் பெருமகிழ்ச்சியை விளைவித்திருக்கின்றது. II இப்பேரிசுக்கியத்தின் 75=ம் செய்யுள் பின்வருமாறு அரங்கனாராற் பதிப்பிக்கப்பெற்றுள்ளது : நீ கண் டனையோ கண்டார்க் கேட்டனையோ ஒன்று தெளிய நசையினம் மொழிமோ வெண்கோட் டியானை பூஞ்சுனை படியும் பொன்மலி பாடிலி பெறீ இயர் யார்வாய்க் கேட்டனை காதலர் வரவே இச்செய்யுள் 'தலைமகன் வரவுணர்த்திய பாணற்குத் தலை மகள் கூறியது' ஆகுமெனத் துறைக்குறிப்பினால் அறியப் படுகின்றது. இதற்கேற்பவே இளம்பூரணரும், கற்பியல் 6-வது சூத்திரவுரையில், இச்செய்யுளை மேற்கோளாகக் காட்டி, 'இது பாணன் வாயிலாக வந்துழிக் கூறியது என உரைக்கின்றார். நச்சினார்க்கினியர் ஒரு சிறிது வேறு படுத்துக்கூறுவர். இவர் மேலைச்சூத்திரத்திற் காணும் 'பல் வேறு நிலை'களை வகுக்கப்புகுந்து, 'அவன் (தலைவன்) வரவு தோழி கூறிய வழி விரும்பிக் கூறுவனவும்' என்ற நிலையைத் தந்து, இச்செய்யுளை யுதகரித்து, இது தலைவன் வரவை விரும்பிக் கூறியது ' எனத் துறைகாட்டினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/119&oldid=1481719" இலிருந்து மீள்விக்கப்பட்டது