பக்கம்:இலக்கிய தீபம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

184 இலக்கிய தீபம் இவ்வுரையை நோக்கிய அளவில் இது உண்மை நிகழ்ச்சியான சரித்திர வரலாறன்று என்பது தெளிவாகும். இது ஒரு பௌராணிக வரலாறு (Mythology). இங்கே குறிப்பிட்ட சக்கரம் ஆஞ்ஞா சக்கரமாதல்வேண்டும்; ஏனெ னின், தேரின்சக்கரமெனக் கொள்ளுதற்குரிய குறிப்பு யாதும் காணப்படுமாறில்லை. தேர், சக்கரம் என்ற இரு சொற்களும் பிரிந்து கிடக்கும் முறையும் ஆஞ்ஞாசக்கர மென்பதனையே வலியுறுத்துகிறது. உரையில் 'நிலமுழுதும் ஆண்ட வேந்தர்' எனப் பொருள் தருந் தொடர்க்குரிய மூலம் 'மோரியர்' என்பதா கும். இப்பொருள் இச்சொற்கு எவ்வாறு வந்தது? மூலத் தில் இல்லாததனை வருவித்துக் கூறவேண்டும் அவசியமும் யாதும் காணப்படவில்லை. மோரியர் என்பது சேரர், சோழர் என்றாற்போலக் குடிப்பெயராயின் உரைகாரர் மோரியர் என்றே கூறியொழிவரன்றி 'நிலமுழுதும் ஆண்ட வேந்தர்' எனச் சொற்பொருள் கூறுவார்போன்று எழு தார். மோரியர் என்பதற்கு இச்சொற்பொருள் அமையு மாறும் இல்லை. இனி, புறநானூற்றின் முதற்பதிப்பில் ' ஓரியர்' என்று மூலத்திற் காணப்படுகின்றது. இதற் கேற்பவே உரையிலும் விளக்கப்பகுதியிலும் ஓரியர் என்றே கொடுக்கப்பட்டுள்ளது. இச்சொல்லிற்கு நிலமுழுதும் ஆண்டவேந்தர் எனச்சொற்பொருள்கொள்ள இடமுண்டா? வடமொழியில் 'உர்வீ' என்ற சொல்லுக்கு அகலிடம்' 'இருபேருலகம்' (விண்ணுலகு, மண்ணுலகு) என்ற பொருள்கள் உள்ளன. இதனோடு 'ஈ' என்பதும் சேர்ந்து 'உர்வீஸ்' என்று தொடர்மொழியாகி 'இருநிலவேந்தன் என்று பொருள்படும். 'உர்வீ என்பது ஓரிய என்று திரிரிந்தது என்று கொள்ளல் தகும். அல்லது 'உர்வீ என்பதன் தத்திதமாக 'ஒளர்விய 'ஓரிய' எனத் திரிந்ததூ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/143&oldid=1500959" இலிருந்து மீள்விக்கப்பட்டது