பக்கம்:இலக்கிய தீபம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மெளரியர் தென் - இந்தியப் படையெடுப்பு 141 எட்டாவது : சக்கரங்களைக் குறித்துப் பல வரலாறுகள் பண்டைக்காலத்து வழங்கின. அவற்றுள் கீழ்வருவதும் ஒன்று : பொய்யா கியரோ பொய்யா கியரோ பாவடி யானை பரிசிலர்க் கருகாச் சீர்கெழு நோன்றாள் அகுதைகட் டோன்றிய பொன்புனை திகிரியிற் பொய்யா கியரோ... (புறம்-233). இங்கே 'திகிரியென்றது திகிரி தைத்ததென்று பிறந்த வார்த்தையை' என்றெழுதினர் உரைகரரர். இதுபோன்று. மோசியர் அல்லது ஓரியர் திகிரியின் வரலாறென்றம் முத் காலத்து வழக்கியிருக்கலாம். மேற்கூறியவற்றை ஊன்றிகோக்குமிடத்து இச்செய் யுரேள் சரித்திரச் சான்றகக் கொள்ளுதல் கிந்தும் ஏற் புடைத்தன்று என்பது புலனாம். இனி, மாமூலனார் மோரியரைக் குறிப்பிடும் பிறிதொரு. செய்யுளைக் கவனிப்போம். அதனுள் நமக்கு வேண்டும் முக்கியமான பகுதி கீழ்வரும் அடிகளே: முரண்மிகு வடுகர் முன்னுற மோரியர் தென்திசை மாதிரம் முன்னிய வரவிற்கு விண்ணுற ஓங்கிய பனியிருங் குன்றத்து ஒண்கதிர்த் திகிரி யுருளிய குறைத்த அறையிறந் தவரோ சென்றனர் பறையறைந் தன்ன அலர் நமக் கொழித்தே (அகம் - 281 டாக்டர் கிருஷ்ணன்வாமி ஐயங்கார் முதலிய ஈரித்திர ஆசிரியர்கள் வடுகரை மோரியரது தூசிப்படையாகக் கொண்டு அவர்கள் முற்படையாகச் செல்ல மோரியர் படையெடுத்துவந்தனர் எனச் சரித்திரம் அமைப்பர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/150&oldid=1500966" இலிருந்து மீள்விக்கப்பட்டது