பக்கம்:இலக்கிய தீபம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பத்துப்பாட்டும் - காலமுறையும் படலைக் கண்ணிப் பரேரெறுழ்த் திணிதோள் முடலை யாக்கை முழுவலி மாக்கள் வண்டுமூசு தேறல் மாந்தி மகிழ்சிறந்து துவலைத் தண்டுளி பேணார் பகலிறந்து 9 இருகோட்டறுவையர் வேண்டுவயிற் றிரிதர (315) என்பதும், (101) முற்பகுதியுள் யவனர் இயற்றிய வினைமாண் பாவை என்பதும் நெடுநல்வாடைப் பகுதிகள். மாக்கள் ஆவார் மிலேச்சர் என்று உரை கூறப்பட்டுளது. யவனர், மிலேச்சர் முதலினோரது தொடர்பு அருகியல்லது பண்டைத் தமிழகச் சரித்திரத்திற் காணப்பெருாகதொன் கும். சங்க இலக்கியங்களில் இவர்களைப் பற்றிய குறிப்புக் கிடைப்பது மிக அருமை. இவ்வகைக் குறிப்புக்கள் காணும் நூல்கள் கால முறையில் அடுத்தடுத்துத் தோன்றின என்று கொள்ளுதல் பொருத்தமே. எனவே, நெடுநல்வாடையை அடுத்து முல்கப்பாட்டுத் தோன்றி யிருத்தல் கூடும். இவ்வூகம் வேறுசில காரணங்களாலும் உறுதி யடை கின்றது. இரண்டு நூல்களிலும் ஒத்த கருத்துக்களும் தொடர்களும் காணப்படுகின்றன. ... ... நாழி கொண்ட நறுவீ முல்லை அரும்பவி ழலரி தூஉய்க் கைதொழுது என்ற முல்லைப்பாட்டு ...நெல்லொடு (8-10) (43) நெல்லு மலருந் தூ உய்க் கைதொழுது என்ற செடுசன்வாடைக் கருத்தோடு ஒத்தமைந்தது. இன்னே வருகுவர் என்ற தொடர் ஈரிடத்தும் (முல்லை. 16, நெடுநல். 155) வருகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/18&oldid=1481495" இலிருந்து மீள்விக்கப்பட்டது