பக்கம்:இலக்கிய தீபம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

38 இலக்கிய தீபம் மிலேச்சர்கள் மாலைப்பொழுதில் தேறலையுண்டு, மழை தூற்றிக்கொண்டிருக்கவும் அதனைப் பொருட்படுத்தாது தெருக்களில் திரிகின்றார்கள். அரசனது அரண்மனை மிக்க அழகுவாய்ந்துள்ளது. அதனை மனை நூல் விதிப்படி ஒரு கன்னில் தொடங்கி இயற்றினர். விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம் இருகோற் குறிநிலை வழுக்காது குடக்கேர்பு ஒருதிறஞ் சாரா அரைநா ளமையத்து நூலறி புலவர் நுண்ணிதிற் கயிறிட்டுத் தேஎங் கொண்டு தெய்வம் நோக்கிப் பெரும்பெயர் மன்னர்க் கொப்ப மனைவகுத்தனர் (73-8) வாயில் நிலையின் உத்தரக் கற்கவி நடுவே திருவும் அதன் இரு புறத்தும் துதிக்கையிற் செங்கழுநீர்ப்பூவையேந்திய இரண்டு பிடியுமாக வகுக்கப்பட்டுள்ளது. இவ்வுத்தாக் கற்களி நாளொடு பெயரிய கோளமை விழுமரத்து என்னப்படுகின்றது. (82) 'உத்தரம் என்னும் நாளின் பெயர் பெற்ற செருகுதல் பொருந்தின பெரிய மரம்' என்பது பொருள். அரண்மணைவித் கர்ப்பக்கிருகம் ஒன்று மிகவும் அழகாக அமைக்கப்பட்டிருக்கிறது. இம் மலைப்பருதி கருவொடு பெயரிய காண்பி னல்லில் (114) என்று கூறப்படுகிறது. அந்தப்புரத்திலே அரசியிருக்கும் கட்டிலின் மேற்கட்டியில், புதுவ தியன்ற மெழுகுசெய் படமிசைத் திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து முரண்மிகு சிறப்பிற் செல்வனொடு நிலைஇய உரோகிணி எழுதப்பட்டுள்ளது. (159-163)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/47&oldid=1481525" இலிருந்து மீள்விக்கப்பட்டது