பக்கம்:இலக்கிய தீபம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொகை நூல்களின் காலமுறை 83 கலியோவெனின் (21), பாண்டியனைப் புகழ்ந்து கூறுகிறது. இங்ஙனமாக, பிற இலக்கியச் சான்றுகளுக்கும் முரணாக வுள்ளது இச்செய்யுள். இக் காரணங்களால் இச் செய்யுளை இயற்றியவர் சொர்ணம்பிள்ளை யென்றே தோன்றுகிறது. இதனை நம்பி எடுத்தாளுதல் கூடாது. இவ்வாறு கூறுவதனால் கலித் தொகை தொகுக்கப்பட்ட தென்ப மறுத்ததன்று. தொகுக்கப்பட்டதாகவே இருக்காம். தொருக்கப்பட் டதாயின், ஒவ்வொரு திணைக்கு முரிய செய்யுட்களை இயற் றிய புலவர் இன்குரெனத் தெர்தத்குத் தற்காலத்தில் இயல வில்லை யென்றதனோடு நாம் அமையவேண்டும். ஆனால், இப் புலவர்களனைவரும் பாண்டிநாட்டைச் சார்ந்தவர்களென்றே நாம் கொள்ளுதல் வேண்டும். பாலைக் கலியில் (30) மீளிவேற் றானையர் புகுதந்தார் நீளுயர் கூடல் நெடுங்கொடி யெழவே எனவும், குதிஞ்சிக்கவிலிஸ் (21) பூந்தண்டார்ப் புலர்சாந்திற் றென்னவ னுயர்கூடல் எனவும், மருதல்கலியில் (38) பொய்யாவாட் டானைப் புனைகழற்காற் றென்னவன் எனவும், முன்சக்கரியின் (4) வாடாச் சீர்த் தென்னவன் எனவும், நெய்தற் கலியில் (26) தென்னவற் றெளித்த தேஎம் போல 5 எனவும் வருதலால் இது தெரியலாகும். இவர்கள் ஒரே காலத்தவர்களென்பதும் கலித்தொகை நூலினைக் கற்றாரனைவ ரும் ஒப்புக்கொள்வர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/92&oldid=1481692" இலிருந்து மீள்விக்கப்பட்டது