பக்கம்:இலக்கிய தீபம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

குறுந்தொகை திருத்தகு மாமுனிசெய் சிந்தா மணியும் விருத்திநச்சி னார்க்கினிய மே 89 என்ற வெண்பாவினாலும் அறியக்கிடக்கின்றது. மேலே காட்டிய உரைச் சிறப்புப் பாயிரத்தில் 'பேராசான் ' என்று கூறப்பட்டுள்ளதேயன்றித் தொல்காப்பிய வுரை முதலியன இயற்றிப் பெயர் சிறந்து விளங்கிய பேராசிரியரென்பது தெளியப்படவில்லை. இப்பேராசான் என்பவர் பேராசிரியரே யென்பது அவரது உரைக் கருத்தைத் தழுவி நச்சினார்க் கினியர் எழுதிய உரைப்பகுதி யொன்று நன்கு தெரிவிக் கின்றது. அகத்திணையியல் 46-ம் சூத்திரவுரையில் 'பேரா சிரியரும் இப்பாட்டில் (யானே யீண்டையேனே ; குறுந். 54) மீனெறி தூண்டிலென்பதனை ஏனையுவம மென்றார்' என வருகின்றது. எனவே குறுந்தொகைக்குப் பேருரை கண்ட வர் பேராசிரியரே யென்பது ஐயமின்றித் தெளியலாம். இனி, 'தொல் பேராசான்' என்று மேலைச் சிறப்புப் பாயிரச் செய்யுள் கூறுதலின், நச்சினார்க்கினியருக்கு மிக முற்பட்டவரென்று ஒருவாறு தெரியலாம். இருவருக்கும் இடைப்பட்ட காலம் இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டு களாகக் கொள்ளின், அது மிகவும் பொருந்துவதேயாம். நச்சினார்க்கினியர் 16-வது நூற்றாண்டில் வாழ்ந்தவரென ஒருவாறு அறுதியிடப்படுகின்றது. ஆகலின்,குறுந்தொகை யுரைகாரராகிய பேராசிரியர் 14-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவ ரெனக் கொள்ளுதல் வேண்டும். இக்கால வரையறை தொல்காப்பிய உரைகாரராகிய பேராசிரியருக்கும் பொருந் துவதாகலின், இரண்டு நூல்களுக்கும் உரையியற்றியவர் ஒருவரேயெனத் துணியத்தகும். வேறொரு செய்தி இங்கே மனங்கொள்ளுதற்குரியது. தொல்காப்பியச் செய்யுளியலுரையிற் பலவிடங்களிற் பேராசிரியரது கருத்தைப் பின்பற்றி நச்சினார்க்கினியர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/98&oldid=1481698" இலிருந்து மீள்விக்கப்பட்டது