பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

இலங்கைக் காட்சிகள்

படிப்பவர்களை விட அந்த 'ஊர்க்குருவி'யைப் படிப்பவர்களே அதிகம். தலையங்கம் பொதுவாக நாட்டு நிலைமையையும் உலக நிலைமையையும் பற்றி ஆராய்வது. 'ஊர்க்குருவி'யோ நெருக்கமாக உள்ள விஷமங்களை உணர்ச்சியோடு கலந்து சொல்வது.

என்னைச் சந்தித்ததையும் என் தோற்றத்தையும் நான் கூறிய விஷயங்களையும் அதில் (15-9-51) எழுதியிருந்தார். உணவுப் பஞ்சத்தைப்பற்றி அவர் எழுதியிருந்த பகுதி இது :

"....... தமிழ் நாட்டில் நிலைமை எப்படி உள்ளது என்று கேட்டேன். எங்கும் வறுமைதானாம். ரெயில்வே ஸ்டேஷனில் யாராவது சாப்பாட்டுப் பொட்டணம் வாங்கிச் சாப்பிட்டால், பாதி உண்ணும்போதே கையேந்திச் சாதத்தைப் பிடுங்கிக் கொண்டு போய் விடுகிறார்களாம். 'தமிழரின் விசேஷப் பண்பாடு காரணமாக இவ்வளவு கஷ்டங்களையும் பலாத்காரப் புரட்சியின்றிச் சகித்து வருகிறார்கள்' என்றார். பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ! பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ ! கடவுளே !!"

இந்தப் பகுதி பலருடைய கண்ணில் நன்றாகப் பட்டிருக்கவேண்டும். அதுவும் அரசியல்வாதிகள் நிச்சயமாக இதைப் பார்த்திருப்பார்கள். கண்டி பாரதி விழாவில் தமிழ் நாட்டு உணவுப் பஞ்சத்தைப் பற்றிய விவாதமே நடந்ததென்று சொல்லவேண்டும். அந்த விவாதத்தைக் காரசாரமாக ஆரம்பித்து வைத்தவர் திரு கனகலிங்கம் அவர்கள், ஆம்; அவர் பாரதி விழாவை ஆரம்பித்து வைத்துப் பேசிய பேச்சில்தான் இந்த விவாதத்தையும் நுழையவிட்டார்.