பக்கம்:இலட்சிய பூமி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i2 "ஆல்ை, எனக்குள்ள கவலையெல்லாம் உணவு தான்! நம்முடைய ரேஷனின் கதி என்ன ஆகப் போகிறது? மாதத்திற்கு மூன்று அவுன்ஸ் இறைச்சி யும் நான்கு அவுன்ஸ் எண்ணெயும்தான்! இந்த அளவு கூடுதலாகப் போகிறதா, இல்லை குறைக்கப் படப் போகிறதா?....” “அட பூர்ஷ்வாவே....நான் வேண்டுவதெல்லாம் ஒரு பாத்திரம் அளவுள்ள நல்ல சுத்தமான அரிசிக் காகத்தான்! இதன் நிமித்தம், நான் மன மகிழ்ச்சி யோடு அடிமைபோல அவ்வளவு கஷ்டப்பட்டும் உழைப்பேன்! நீ அப்படிச் செய்யமாட்டாயா?..." "இதோ, இந்தச் செழிப்பான பள்ளத்தாக்கைப் பார்! காய்கறிகள், அரிசி, மீன், முட்டைகள், பன்றிக் கொழுப்பு முதலியனவெல்லாம் எங்கே போய் விட்டன?” 'கழிந்த இரவு குடும்பத்தில் ஒரு சச்சரவு ஏற் பட்டுவிட்டது. என்னுடைய மருமகள்மார் மூன்று பேரும் வருஷாந்தர துணி ரேஷன் பெற்ருர்கள். ஆளுக்கு பதினெட்டு அங்குலம் அளவு. மூவருக்கும் சேரவேண்டிய ஐம்பத்து நாலு அங்குலம் துணியை யும் ஒரே துண்டாக-ஒரே மொத்தமாகத் தரும்படி யோசனை சொன்னேன். அப்படி தரும் பட்சத்தில் ஒருத்திக்கு ஒரு சிறிய ஜாக்கெட்டுக்குப் போதும். ஒருத்தியும் விட்டுக் கொடுக்கவில்லை!...” 'போன மாதம் மலைமலையாக வந்து சேர்ந்த ஆணிகளைப் பார்த்தாய் அல்லவா?” 'சென்ற வருஷத்தில் இரும்பு உலைகளிலிருந்து கிடைத்த உபரியான உப-பொருள்கள் அவை!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/12&oldid=752678" இலிருந்து மீள்விக்கப்பட்டது