பக்கம்:இலட்சிய பூமி.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148


மாதங்களுக்கு முந்தி, கோடையின் துவக்கத்தில். ஒருநாள் ஆற்றில் அசாய் மீன் பிடித்ததை ஞாபகப் படுத்திப்பார்.” - “ஞாபகம் வருகிறது; அதைப்பற்றி என்னிடம் சொல்லியிருக்கிறீர்கள்.” 'அவன் இரண்டு மீன் பிடித்தான்; ஒன்றை எனக்குக் கொடுத்தான். என்னுடைய மண்ணெண் னெய் அடுப்பில் அதைச் சமையல் பண்ணினேன், மறுநாளே இது சம்பந்தமாக மேலிடத்துக்குச் சேதி போய்விட்டது. ஒருவன் ஆற்றில் மீன் பிடித்து அதை ஆக்கித்தனியே சாப்பிடக்கூடமுடியவில்லையென்முல் அப்புறம் அவனுக்கு வேறு எந்தி உரிமைதான் இருக்கப்போகிறது: இங்கிருந்து வெளியேறிவிட வேண்டும் என்று அப்பொழுதே-அவ்விடத்திலேயே முடிவு கட்டிவிட்டேன்!” 'நீங்கள் அதைப்பற்றி மறந்துவிட்டிருக்கிறீர்கள் என்று நான் நினைத்திருந்தேன். அதைப்பற்றி இன்ன மும் கிலேசப்படுகிறீர்களா?” "ஆம்; பெரிதும் கிலேசப்படுகிறேன். அது ஒரு சாதாரணச் சம்பவம்தான்; ஆனலும் அதை நான் ஒருபோதும் மறவேன்.” - லெய்வா புதுமையுடன் புன்னகை பூத்தாள்; ஒய்வு கொண்டாள். ஃபானின் கண்களில் வீசும் உறுதியை அவள் கண்டாள். "ஷெக்டின், உங்களைப் பார்த்து நான் சிரிக்க வில்லை..உங்கள் உட்கருத்து புரிகிறது எனக்கு.' 'இம்மாதிரியான அற்ப விஷயங்கள் என்னை வெகுவாகப் பாதிக்கின்றன எனக்கு எரிச்சலூட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/148&oldid=1274894" இலிருந்து மீள்விக்கப்பட்டது