பக்கம்:இலட்சிய பூமி.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162


ஜேம்ஸ் எழுந்து நின்ருன். அறையில் நிதான மாக நடந்தான். அப்போது அவனை அன்பும், நம்பிக் கையும் நிரம்பிய புன்னகையோடு பார்த்தாள் ஈஸ்-. டுவான நோக்கித் திரும்பினன் ஜேம்ஸ். 'நம்முடன் ஃபான் வருவது உறுதிதான?” "அவர் அப்படித்தான் சொன்னர்.” 'வழி நெடுகிலும்தானே?” "அப்படித்தான் கருதுகிறேன்.” "ஏன்?" - 'ஒவ்வொருவரும் அவர் உதவியை விரும்பு கிருர்கள். பருவநிலை முதலியவைகளை ஆலோசிக்கை யில், தப்புவதற்கு இதுவே நல்ல நேரம் என்று அவர் சொல்லுகிரு.ர்.” "அவர் ஒரு துப்பாக்கி விஷயமாக ஏதாவது குறிப்பிட்டாரா?' என்று விசாரித்தான் ஜேம்ஸ். அப்பொழுதுதான் வீட்டுப் பையன்-மதப் பிரசார சபை இல்லத்துப் பையன்-முன் வாசல் வழி யாக உள்ளே விரைந்து வந்தான். ஜேம்ஸ் பேச்சை நிறுத்தினன். உள்ளே நுழைந்தபோது அவனுக்கு மூச்சு இரைத்தது. "வெளியில் ஒரே குழப்பமாக இருக் கிறது; வெளியே தெருக்களுக்குச் செல்லவேண்டா மென்று உங்களுக்கு எச்சரிப்பதற்காக வேகமாகத் திரும்பி வந்தேன்.” "துப்பாக்கிப் பிரயோகம் நடந்ததா?” "இல்லை. உள்ளே நுழையும் உரிமை கோரி ஒரு பெரும் கூட்டம் போலீஸ் தலைமை அலுவலகத்தில் கூடியது. போலீஸ் தலைமை அதிகாரி அங்கு இல்லை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/162&oldid=1274905" இலிருந்து மீள்விக்கப்பட்டது