உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164


"ஆஸ்பத்திரி மறுபடியும் சுறுசுறுப்பாக இருக்கு மென்று நான் நினைக்கிறேன்.” "அது ஒன்றும் அயல் நாட்டார்களுக்கு எதி ரானது இல்லைதானே?” “காவல் படையினர் ஜனங்களைக் கொன்றதற் கும் துப்பாக்கியால் சுட்டதற்கும் எதிரான குழப்பம் அது. ஆலுைம், ஸிஸ்டர் ஆங்கெலிகா, மிஸ்டர் டாய், நீங்கள் இருவரும் வீதிகளில் நடமாடக் கூடா தென்பதுதான் என் புத்திமதியாகும். ஜனக்கூட்டம் எதையும் செய்யும்” என்று பதில் மொழிந்தான். டுவான். 'நீ ஏன் போய் பார்த்து, என்ன நடந்துகொண் டிருக்கிறதென்பதை எங்களிடம் வந்து சொல்லக் கூடாது?’ என்று பையனிடம் கேட்டான் ஜேம்ஸ். 'அவ்வாறே செய்கிறேன்.” முகவாய்க்கட்டையைக் கையில் ஏந்தியவளாக, ஜன்னலுக்கு வெளியே எட்டிப் பார்த்துக்கொண்டு ஈஸ் உட்கார்ந்திருந்தாள். அவளை ஆவலுடன் கவனித்தான் ஜேம்ஸ். இம்மாதிரிச் சமயங்களில் அவள் முகம் குழம்பிக் கிடப்பது வழக்கம். ஆனால், இப்போது அவள் வதனம் குழப்பத்தின் அடையா ளத்தைக் காட்டவில்லை. - "ஊர்க்காவல் படையினர் ஸ்தம்பித்து விட்ட னர்போல் தோன்றுகிறது” என்ருன் டுவான். அவன் முகம் சற்றே தளர்ந்தது; உள்ளுரச் சிரித்துக் கொண்டான். "அவர்கள் கூட்டத்தினரைச் சுட விரும்பமாட்டார்கள்; அவர்களுக்கு அந்தத் துணிவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/164&oldid=1274907" இலிருந்து மீள்விக்கப்பட்டது