பக்கம்:இலட்சிய பூமி.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166


'இது அப்படிப்பட்டதன்று. இது உடை விஷய மாக எழுந்தது. மலைகளில் அதுசமயம் மிகவும் குளிராக இருந்தது. உறைத்துணி-காடாத்துணி தேசீயமயமாக்கப்பட்டது-இது உங்களுக்குத் தெரிந் ததுதான். கம்யூனில் யாருக்கும் எதுவும் சொந்த மில்லை. துணி விநியோகம் நியாயமான முறையில் நடைபெறவில்லை; அல்லது, காடா துணிகளாலான நீண்ட கைகளுள்ள மேலங்கிகள் எல்லோருக்கும் போதிய அளவு கிடைக்கவில்லை. நிலக்கரியும் கிடைக்க வில்லை. மலைப்பிராந்தியங்கள் சிலவற்றின் தரைப் பகுதிகளிலே - வடகிழக்குப் பக்கமாக - நிலக்கரி பொறுக்கலாம். தாங்கள் பொறுக்கிய நிலக்கரியை எல்லாம் வடக்கே கப்பலில் ஏற்றி அனுப்பியதைக் குடியானவர்கள் கண்டார்கள். விளக்கு மாறு, குப்பைக் கூடை, களைக்கொட்டு, மண்வெட்டி போன்ற எதுவுமே ஒருவருக்கும் சொந்தமில்லை. எல்லாம் கம்யூனுக்குச் சொந்தம். அது பார்த்து ஒவ்வொருவருக்கும் அளிக்க விரும்புகிறது. ஆளுல் அதனுல் இயலாது. மழை நாட்களில் குடைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது.” இந்த நடப்புகளெல்லாம் சரித்திரத்துக்குச் சொந்தமானவை என்ற பாவனையில் டுவான் இடை மறித்து தாழ்ந்த, தெளிந்த தொனியில் பேச லானன். "கியாங்ஸி எல்லையிலுள்ள கான்ஷியன், டிங்சோ போன்ற இடங்களிலிருந்து எண்ணெய்த் தாள் குடைகள் வந்து சேருவது வழக்கம், அங்கு தான் மேற்படி குடைகளுக்கு வேண்டிய ஒருவகை பான எண்ணெய் பெருமளவில் கிடைத்தது. தனிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/166&oldid=1274908" இலிருந்து மீள்விக்கப்பட்டது